மலாய்மொழி பைபிள்களை எரிக்கப்போவதாக மிரட்டிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிமீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது அமைச்சரவை செய்த முடிவு அல்ல என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி.
அவிவகாரம் பற்றி தாமும் போக்குவரத்து அமைச்சரும் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் கூறினார். அவ்விவகாரத்தில் அமைச்சரவை எந்த முடிவையும் எடுக்க முடியாது.
அது பற்றி அமைச்சரவையில் விளக்கமளிக்கப்பட்டது, அவ்வளவுதான்.
“அமைச்சரவை ஏஜி-க்காக முடிவெடுக்க முடியாது.
“ஏஜி சட்டப்படி நடந்துகொள்கிறார். ஏஜிக்கு நாங்கள் உத்தரவு போடக் கூடாது. அப்படிச் செய்தாக் அவரது பொறுப்பில் தலையிடுவதாகக் குறை கூறுவார்கள்”, என்றவர் சொன்னார்.
AG-க்காக உம்னோ முடிவு செய்யும் போது, அமைச்சரவை செய்ய முடியாது என்றால் இது என்ன கையாலாகாத அரசா?.
சட்டம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் AG-ன் முடிவே இறுதியானது என்றால் உங்களுக்கு வீணே ஏன் அந்த de facto சட்ட அமைச்சர் பதவி? மக்களின் வரிப்பணம் பாழ்.
அம்னோ தான் முடிவு செய்கிறது என்பது ஊரறிந்த விஷயம்!
பெர்காசா இப்ராஹிம் அலி ஒரு மலாய்காரன் என்பதால் அம்னோவும் அமைச்சரவையும் அந்த காட்டுப் பன்றியை தற்காப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.அந்த மூன்று தரப்புமே இனவாதக் குட்டையில் ஊறிய பெலாசான்கள்.கெராக்கான் கட்சியின் தலைவர் ஒருவர் சொல்லியது போல் அந்தக் கூட்டணி நாட்டின் நிலைத் தன்மையை அழிக்க வந்த பராசிட் என்ற புல்லுருவிதான்.
நாங்கள் நஜிஸ் சொல்வதை தான் செய்வோம் என்று சொல்லிட்டு போட…