கையூட்டுப் பெற்றதற்காக 2012-இலிருந்து 273 போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

polisகையூட்டு  பெற்றதாக  சந்தேகிக்கப்படும்  போலீஸ்காரர்களை விசாரிக்கும்  பொறுப்பை  எப்போதுமே  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம் (எம்ஏசிசி)  ஒப்படைத்து  விடுவதாக  போலீஸ்  கூறியது.

குற்றமிழைக்கும்  அதிகாரிகளை  போலீஸ்  பாதுகாப்பதில்லை, உடனடி  நடவடிக்கைக்காக  எம்ஏசிசி-இடம்  ஒப்படைக்கப்படுவதாக  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர் காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார்.

“ஒழுங்குவிதி  மீறல்கள்,  நடைமுறை  மீறல்கள் போன்றவற்றை  மட்டுமே  போலீஸ்  விசாரிக்கிறது”, என்றாரவர்.

2012-இலிருந்து  273  போலீஸ்காரர்கள்  கையூட்டுப்  பெற்ற  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களில்  43-பேர்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர். 168 பேர்மீது  இன்னமும்  விசாரணை  நடந்து  வருகிறது  என்றவர்  கூறினார்.

-பெர்னாமா