அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்தமலேசியர்களுக்கும் அதன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
இந்நாட்டில் நமக்கும் வரலாறு உண்டு, அதனைத் தெரிந்து கொள்ள நாம் இத்தீப திருநாளில் நமக்கு நாமே ஆணையிட்டுக்கொள்ள வேண்டும்.
இந்நன்னாளில் லங்காசுகத்தை முதன்முதலில் ஆண்ட இந்து மன்னன் மாறன் மஹாவம்சனை நினைவில் கொள்வோமாக.
HAPPY PONGGAL வாழ்த்துக்கள் ,தமிழர் திருநாள் போங்கள் வாழ்த்துக்கள்
நன்றி செம்பருத்தி.தங்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.வாழ்க.வளர்க.
நாம் கொண்டாடும் இந்த தீபத் திருநாள் உண்மையில் மகிழ்ச்சிகரமான தீபத் திருநாளாக இருக்கட்டும். தீபாவளியென்றால், தீபவொளி – ஆதாவது “தீப ஒளி” என்ற எண்ணம் மேலோங்கட்டும். இதுநாள் வரை நம்மை சூழ்ந்துள்ள இருள் நீங்கி ஒளி மலரும் நாள். இறைவனை நினைந்துக் கொண்டாடும் நாள். ஆடிப் பாடி நாம் எல்லோரும் ஒன்றுக் கூடி மகிழும் நாள். “மது மாமிசம் அளவுக்கு அதிகமாக உண்டு கூடிக் கூடி குடித்துவித்து கும்மாளம் போடும் நாளல்ல”. நம் இளைஞர்களிடையே உள்ள வேண்டாத குடிப் பழக்கம், இந்த தீபத் திருநாளிலாவது கொஞ்சம் குறைய வேண்டும். பலரின் தீவிரக் குடிபழக்கத்தால், இந்தத் தீபத் திருநாளனது சிலரினுயிரையே குடிக்கும் நாளாக மாறிவிடுகின்றது. அந்த நிலை நமக்கு வேண்டாம். ஆசரியர் கேட்டுக் கொண்டதுப் போன்று இந்நாட்டில் நமக்கும் ஒரு வரலாறு உண்டு. அதை நாம் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டும். நமக்கு திருவள்ளுவர் காட்டிய வழிமுறைகள்தான் நம்முடைய வாழ்க்கை நெறிமுறைகள். நாம் நூற்றுக்கு நூறு வள்ளுவன் காட்டிய வழியில் செல்லா முடியாவிட்டாலும் முடிந்த மட்டும் திருக்குறள் காட்டிய வழியில் செல்வோம். திருக்குறள் மற்றும் திருமுறைகள் இவையெல்லாம் சைவ சித்தாந்த நூல்கள். உண்மையைப் பேசுவது, உண்மையை சொன்னால் அதுதான் சைவ சித்தாந்தம். ஹிந்து மதத்திருக்கு அடிப்படையே, உயிர் மூச்சே இந்த சைவ சித்தாந்த நூல்கள்தான். இந்த நூட்களையெல்லாம் இயற்க்கை அன்னையானவள் நமக்கு இன்பத் தமிழாலேயே தந்துள்ளாள். ஆதாவது இவைகளை காலம் நமக்கு தந்த விலை மதிப்பற்றப் பரிசு. அந்தத் தமிழை நேசிக்க, தமிழர்கள் என்றும் ஒருத் தாய் மக்களாக மகிழ்ச்சியோடும் இனியென்றும் இன்னாட்டில் ஒற்றுமையோடு வாழ உறுதி மொழி ஏற்ப்போம்.
மிக்க நன்றி !!!!
செம்பருத்திக்கும் எங்களின் இனிய “தீபாவளி நல் வாழ்த்துக்கள்”,
வாழ்க, வளர்க.
செம்பருத்தியின் சைவ சமியிகளுக்கும், இந்துகளுக்கும் எமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்துக்கள் .
தீபாவளிக்கும்,பொங்களுக்கும்,வருட பிறப்பிற்கும் வித்தியாசம் தெரியனும்.தோட்டப்புரத்தில் வாழந்த ஞாபகம் போகவில்லை என்று நினைக்கின்றேன்,ஆடு,மாடு,கோழி,வாத்து, வளர்திருப்பார்போல்.தீபாவளி எப்படி தீபாவொளி ஆனது,செம்ம காமடி போங்க,இந்த வருட இன்ப தீபாவளி,காமடி தீபாவளி ஆகிவிட்டது.எது எப்படியோ செம்பருத்திக்கும்,அதன் வாசகர்க்கும்,ஹிந்து உலகிற்கும் தீபவொளி சோரி தீபாவளி நல்வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
“தீப ஆவளி” என்னும் தமிழ் வார்த்தை அறியாதவர் எல்லாம் தமிழருக்கு அறிவுரை வழங்க முன் வந்திருப்பது நம்முடைய துரதிருஷ்ட்டம்.
தீபாவளி,தீப வொளி ஆனது இப்போது தீப ஆவளி என்று மாறிவிட்டது,அடுத்து என்னவோ…..,அப்படியானால் இந்த தீபாவளி தமிழர் பண்டிகையோ.இல்லை என்பீரே…..,நாராயண நாராயண.
“தீப ஆவளி” என்பது தீப வரிசை அல்லது விளக்கு வரிசை என்பதாகும். தங்கள் மொழியில் அதற்கு அர்த்தமில்லை என்பதால் தமிழ் மொழியின் அழகை இரசியுங்கள். இதுதான் தமிழ் மொழியின் சிறப்பு என்பதை உணருங்கள்.
தீபாவளி கொண்டாடும் அனைத்து சைவசமயதினருக்கும், இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தற்போது ஊடகங்களில் தீப ஒளி யை தீபாலி என்று குறிப்பிடுகிறார்கள் பைதியக்கரர்கள்பத்தும் சொல்வர் போகட்டும் விட்டு விடுங்கள் !!!
தித்திக்கும் திருநாளாம் ,
சிங்காரத் திருநாளாம் ,
தீப ஒளித் திருநாளாம் ,
தீபாவளித் திருநாளாம் ,
காலம் தொட்டத் திருநாளாம் ,
இந்துக்கள் திருநாளாம் ,
கொண்டாட்டத்தில் திளைக்கும் திருநாளாம்,
தீப ஒளி கொண்டாடும் அனைவருக்கும் திருநாளாம் ,
[ தீப ஒளி ] வாழ்த்துக்கள் ,
செம்பருத்தி குடும்பத்தினருக்கு என் இனிய முன் திபாவளி வாழ்த்துக்கள் . எனக்கு நாளைக்கு தான் திபாவளி .
தீபாவளி கொண்டாடும் எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இருள் அகற்றி ஒளி பிரகாசிக்கும் தீபாவளி திருநாள் முதல் நமது எண்ணத்தில் உள்ள எதிர்மறையான சிந்தனைகள் அகன்று, இனத்தின் மேம்பாட்டிற்கு வழி காணும் ஒற்றுமை, புரிந்துணர்வு, ஊக்குவிப்பு, ஆதரவுக்கு நேர்மறையான சிந்தனைகள் பிரகாசிக்க வேண்டும். எல்லோருக்கும் மீண்டும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
தீபாவளி வந்தது; தீபாவளி போனது. வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்துங்கள். எதிர்காலம் உங்கள் கையில். எதிர்கால வாழ்கையை சிறப்பாக அமைத்துக்கொண்டால் தினம் தினம் தீபாவளியே!
இனிய தீபாவளி வாழ்த்துகள்…
சரி தான் மங்கை நாமும் அமாவாசையையே தீபாவளி தினமாக கொண்டாடு வருகிறோம்.தை மாதம் பூச நட்சத்திரம் வரும்போது நேர்திகடன் செலுத்துவதை சிலர 1 மாதத்திற்கு முன்னதாகவே செய்துவிடுவதன் நோக்கம் புரியவில்லை,அது அவரின் நம்பிக்கை யென்று விட்டுவிடுவோம்.இன்று தான் தீபாவளி ஆரம்பம் பிதுர்களுக்கு கடமை செய்து,ஆசீர்வாதம் பெற்று புத்தாடை உடுத்தி ஆலயம் சென்று தெய்வத்தை தரிசித்து உணவை சுவைத்து குடும்பத்துடன் கலந்து கொண்டாடுவோம்,நாலையே வரவேற்பு,உபசரிப்பு,விருந்து போன்ற நிகழ்வு.எவரின் மணதை தெரிந்தோ,தெரியாமலோ நோக செய்திருப்பின் கோறுகின்றேன் மன்னிப்பு.வாழ்க நாராயண நாமம்.
இன்னும் தீபாவளி கொண்டாட்டம் முடியவில்லை அதற்குள்
பொங்கலா !!!!
மங்கள தீபாவளி நல் வாழ்த்துகள் .
வாழ்க நலம் .
என்று BN PAS PERKASA MIC MCA IPF ISMA ROSMAH அழிகிறதோ அன்று மக்களுக்கு தீபாவளி
தமிழா/ தமிழாள் தீபாவளி உனதல்ல !
(ஹ) மன்னிகவும் சமஸ்கிருத ஒவ்வாமை “எப்பி தீபாவளி” மகிழ்ச்சியான தீபாவளி…! இது என்ன தமிழனின் ஆங்கில கருத்துப பிழையா ? எழுதுப பிழையா ? யோசியுங்கள். நான் நெத்திஅடிக்கி வரேன். காரணம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே?
இப்ப 20 ஆண்டுகளாக தமிழர் நாட்டிலும் உலக முழுக்க பிற தமிழின உரிமை போராளிகள் மெல்ல நகர்த்தும் புதிய போராட்டம். தமிழக நாம் தமிழர் சீமானின் ,,,மலேசியா நாம் தமிழர் இயக்க தம்பி கலை முகிலன், அறிவேந்தன், பால முருகன் என்னையும் சேர்த்து ” தீபா வளி” தமிழர் விழா அல்ல என்ற விழிப்பு நாள் மலர்ந்துள்ளது.
தீபாவளி திருநாள் ,வாழ்த்துகள் தமிழர்களுக்கு வாயில் முட்டாய் ஊட்டும் திருவிழா! சொன்னார்கள் “ஒளிகள்” வரிசைபிடித்து நிற்கும் அந்த அழகை ரசிக்கலாம். அது ஒரு அழகுதான். ஆனால் இன அறியாமை சூன்யமும் அங்குதான் அடக்கம் செய்தாகி உள்ளது. சற்றே மறு அடக்கம் செய்ய ஒரு forensic மற்றும் மரபணு நிபுணரை தேடுகிறேன்? ஆவியாய் வந்து அமுக்கினால் ஒரு வேளை மதிப்பான்களோ? அந்த all ok கூட்டம் தான் தீவளி விருந்துக்கு போச்சே ..பிடிச்சா பிச்சைக கூடங்களைதான் அமுக்கணும் பாவம் !!
ஊனமான இந்த தமிழர் சமுதாயத்துக்கு பல நூறு ஆண்டுகள் அந்த நம்பிக்கை ஒளி ஒலிந்து அழிந்துள்ளது. ஆனால் இத தமிழர் சமுதாயம் மிளிர வில்லை. சமயமும் ,சம்பிரதாயமும், கலாச்சாரமும் கேற்க, பார்க்க, ரசிக்க விமர்சையாக உள்ளது.ஆனால்
சமூக மரியாதை இன்னும் கருப்பு மையில் வரைந்த ஏட்டுச்சுரகாய் போல இருள் சூழ்த்து உள்ளது. வெட்ட வெட்ட வெடியவில்லை. இருந்தும் மனகோளாறு தன் முனைப்பு தூண்டல் காரன் சொல்லறான் … முயற்சித்தால் வானை வில்லாய் மடித்து …எல்லையே இல்லாத வானமே எல்லை என்கிறான் அதற்கும் கைத்தட்டல்..!!!!
உலக வண்ணத்தில் நம் கன்னத்தில் கை வைத்து ஆயிரமாயிரம் பிரகாசங்களை பார்க்கிறோம் ஆனால் அஞ்சடி ஒரத்தில் இன அவலம் ஓசையின்றிவாயிக்கும் கையிக்கும் தேய்ந்த்துக்கொண்டு இருக்கிறது. தலைகளின் அரசியல் ஆராதனை வாழ்த்துகளை பத்திரிக்கைகளின் பார்த்தோம். அவர் வீட்டு பின்னாடி குடிசையில் ஓட்டை ஓடிசலில் இரவு வருமுன் வெளிச்சம் பாராமல் தூங்கிவிடும் பிஞ்சுகளுக்கு தீபாவளி வாழ்த்தாம்? இப்படி எத்தனை கோர விளைச்சல்களை இந்த இனம் அனுபவிக்கையில் “புண்ணாக்கு உனக்கு ஏண்டா இந்த விளாங்கா தன தீபாவளி ? என்று கேக்கிறேன் !!
இந்த நாட்டிலும் உலக நாடுகளிலும் அழும் பிள்ளைக்கு பாலூட்டுவது போல தமிழர்களுக்கு வாயில் முட்டாய் விழா ?
பல ஆதாரங்களை படித்தபின்புதான் இது ஒரு எந்த சமைய விழா ? யாருடைய கலாசார விழா ? தமிழர்கள் ஏன் கொண்டாட வேண்டும்? இது இந்துக்களுக்கு சொந்தமானாதா? யாரெல்லாம் இந்துக்கள்? முதல் நாள் இறந்தவர்களுக்கு படையல்.மறுநாள் கோவிலுக்கு போக வேண்டுமா? தமிழர்களுக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம் ? தமிழர்களின் தீபாவளி தொடர்பான் இதிகாசங்களில் எதாச்சும் ஒரு உண்மை உண்டா? இது ஆரியர்கள் தமிழர்களை ஏமாற்றும் சமய விளையாட்டா ? அல்லது அறியா தமிழர்களின் அறிவிலித்தனமா? நமக்குத்தெரியாமல் கோடான கோடிமக்கள் கோடிக்கணக்கில் செலவுகள் ஏன்?
மனித நாகரீகங்கள் தனிமனிதன் ஒழுக்கத்தில் இருந்துதான் வளரும்.
அற்புதமான திருக்குறளில் பல படிவங்கள் படிப்பினைகள் இருந்தும் பகவத் கீதையில் ஒரு பகுதியை எடுத்துகொண்டோம் அதிலும் நாலு வகை காவிய கற்பனைகள் .உலக வரலாற்றில் அதில் மட்டும்தான் தீமையை வென்று நன்மையை காட்டினார்களா ?
மலேசியாவில் தமிழனுக்கு செத்தாராம் தமிழன் கணபதியை வீர சேனாவை நினைவில் வைத்து விழா எடுக்க எவனுமில்லை …கூட்டத்தோடு கும்மாளம் அடிக்க, தண்ணி அடிக்க, அவனை இவனை அடித்து கடன் வாங்கி தீபாவளி கொண்டாட்டம் ஏன் ? இதற்கு அரசியல் தலைவன் முதல் பிரதமர் வரை அரசியல் ஆளுமை வாழ்வாதார அபிசேசங்கள்?
நான் உண்மையை கேக்கிறேன் தீபாவளி ? வாழ்த்து கூறுவதால், தனி மனிதனும் ,குடும்பமும் ,நாடும் மக்களும் சுகமாக வாழ்ந்து விட முடியுமா? ஒரு மாயை மௌனத்தில் ஒளியும் ஒலிகளும் நரகாசுரனின் அசுரன் ஒழிப்பு நாடகமும் இந்த தமிழன் சமுதாயத்தை இதுவரை காப்பாத்தி உள்ளதா ? தமிழா தெரிந்தவர்கள் மட்டும் பதில் எழுதுங்கள். வரும் வாழ்த்துகளுக்கு மனமில்லாமல் தீபாவளி (வலி)யை சற்று மாற்றி தீப ஒளி வாழ்த்து சொல்லும் துர்ப்பாக்கிய தமிழன். வென்று வரும் வரை தீபங்கள் ஒளி வாழ்த்துகள். இப்படி மாற்றியாச்சும் சிந்திப்போம்.
மண்காக் நஜிஸ் வாழ்த்து சரியான ஒன்று எந்த மூன்றாம் தர வர்க்க தமிழன் இவனுங்க காலத்திலே தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடினான் என்று கூறுங்கள் பார்ப்போம் 50 வருடமாக நான் கண் கூடாக பார்த்த ஒன்று ஏன் நடுநிலையில் உள்ள தமிழனும்தான் நிம்மதியாக கடன் வாங்காமல் தீபாவளி கொண்டாடினான் என்று சொல்ல சொல்லுங்க பார்ப்போம் கேவலமான bn அரசியல் கட்சிகள் அழிந்தால் அடுத்ட தலைமுறை சிறப்பாக வழ முடியும்