காஜாங் சிறையில் ஏற்பட்ட கொடூர அனுபவங்கள் என அதன் முன்னாள் கைதிகளில் ஒருவரான பி..உதயகுமார் சொல்லியிருப்பவை உண்மையானவையா என்பது குறித்து மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) விசாரணை நடத்த வேண்டும் என்று புரோஹாம் வலியுறுத்தியுள்ளது.
“சிறைகளுக்கு வருகை அளிக்கவும் அங்குள்ள நிலவரங்கள்மீது பொது விசாரணை நடத்தவும் சுஹாகாம் சட்டம் அந்த மனித உரிமை ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.
“எனவே, கைதிகள் நடத்தப்படும் விதமும் சிறை நிலவரங்களும் ஐநா-வின் அடிப்படை தரங்களுக்கு ஏற்ப உள்ளனவா என்பதை சுஹாகாம் விரிவான ஆய்வின்வழி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என புரோஹாம் தலைவர் குதுபுல் ஜமான் புஹாரி ஓர் அறிக்கையில் கூறினார்.
சுஹகம் இந்த சந்தர்பத்தை விட கூடாது….
நாம் செய்வதை செய்து கொண்டு இருக்க வேண்டும். எனினும் அம்னோ முஸ்லிம்கள் ஆட்சியில் இருந்து வெளியேறாமல் அதை தில்லு முள்ளு செய்து தங்களின் கையில் வைத்திருக்கவே இவ்வளவு அநீதிகளும் அக்கிரமங்களும். அதிலும் தற்போது உள்ள அம்நோஜென்மங்களுக்கு நியாயம் நீதி நேர்மை என்றால் என்ன வென்றே புரியாது. அவன்கள் சொல்வதே நீதி நியாயம் .