பல்கலைக்கழக அதிகாரிகளின் மருட்டலையும் பொருட்படுத்தாமல் எதிரணித் தலைவர் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் யுனிவர்சிடி மலாயா மாணவர் சங்கம் (பிஎம்யுஎம்) உறுதியாக உள்ளது.
சொற்பொழிவு நடத்தப்படுவது பற்றிப் பல்கலைக்கழகம், அதன் ஏற்பாட்டாளரும் பிஎம்யுஎம் தலைவருமான பாஹ்மி சைனலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருப்பதாக இன்று பெரிதா ஹரியான் கூறியது.
ஆனால், அச்சொற்பொழிவு அக்டோபர் 27-இல், அதாவது அன்வாரின் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டு மீதான மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முதல் நாள் நடக்கும் என பிஎம்யுஎம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
மாணவர்கள் சிறந்தவர்கள் அதுதான் நஜிஸ் தடை செய்தும் மாபெரும் வெற்றி அடைய போராடுகின்றனர்
விசாரணையை நீதியுடன் நடத்த கோறினால் ஞாயம்,அல்லது பொதுமக்கள் காணும்படி டீவியில் நேரடி ஒலிப்பரப்பினால் ஞாயம்,ஆனால் இங்கே நநடப்பது………,,நாாராயண நாராயண.