பினாங்கில் அங்காடிக் கடைக்காரர்கள் வெளிநாட்டுச் சமையல்காரர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளத் தடை விதிக்கப்படும். ஒரு ஆய்வில் 86 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பினாங்கு அரசு அம்முடிவுக்கு வந்துள்ளது.
அடுத்த ஆண்டிலிருந்து அக்கொள்கை நடப்புக்கு வருவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“வெளிநாட்டவர் சமையல்காரர்களுக்கு உதவியாக, கடை உதவியாளர்களாக இருக்கலாம். ஆனால், தலைமை சமையல்காரர்கள் உள்நாட்டவராகத்தான் இருக்க வேண்டும்”, என லிம் கூறினார்.
இக்கொள்கை அங்காடிக் கடைகளுக்கும் விற்பனை மையங்களில் உள்ள உணவுக் கடைகளுக்கும் மட்டுமே. உணவகங்களுக்கு விலக்களிக்கப்படும்.
இதை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும் .. தற்பொழுது மலேசியர்களுக்கு குறிப்பாக நம் இந்தியர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளத
எதற்குதான் வெளிடாட்டவர்க்கை கொண்டு வருவது என்று தெரியாமல் பொய் விட்டதோ ? முடி திருத்த வெளிநாட்டவர்கள் ………… உணவகத்துக்கு வெளிநாட்டவர்கள்…….. பாதுகாவலர் வெளிநாட்டவர்கள்……. நாளிதழ் விநியோகிக்க வெளிநாட்டவர்கள்……… அப்போ நம்மவர்கள் எங்கே தான் வேலைக்கு போவது ?????
வீடு புகுந்து திருடுதல்,வழிப்பறி , கார் இழுப்பது ,போன்ற வேலைகள்
நமக்கு எப்போதும் உள்ளன,எனவே மற்ற வேலைகள் நமக்கு
தேவை இல்லை என்று ஒரு வேளை அரசு கொள்கையாக
இருக்கலாம்.
நம்மவர் செய்வரா,பினாங்கை தனி நாடாக்கவே இந்த திட்டம்போல் தோனுகின்றது.பொருத்திருந்து பார்ப்போம்,வாழ்க நாராயண நாமம்.
ஆமாங்க ஹோக்கியான் மீ கேட்டால் , மியம்மார் மீ போட்டு தராங்க சீன கடையில் !
நல்ல முயற்சியா நல்ல செய்யுங்க நமது நாடு அந்நிய தொழிலார்களை நம்பித்தான் நகர்துக்கொண்டு இருக்கிறது இது எங்குப்போய் முடியுமோ
மெயிட்டை, முதலில் நிறுத்த வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
சீனன் அவன் புத்திய கட்ட ஆரம்பிச்சிட்டான், இந்த DAP காரனுக்கு சினந்தான் கண்ணனுக்கு தெரிவான். நம்வர்கள்தான் சினன் … கழுவவே நேரம் இல்லை. சீனாவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பினாங்கில் பலவிதமான தொழில் செய்கிறார்கள். அது கண்ணனுக்கு தெரியாது. பங்கலகரான் கிட்டத்தட்ட 75 கடை திறந்து வச்சிருக்கான் அதை கேட்க முடியவில்லை வந்துடான் நம்மகிட்ட. ஆனால் மலேசியா இந்தியர்கள் எத்தனை பேர் முடிகடை, கோபிக்கடை, வங்கசகடை, வேலை செய்கிறார்கள். மலேசியன் சும்மா தெரியாம புலபதிந்க, இன்று மலேசியாவில் ஆரம்ப சம்பளமே 900.00. கிட்டத்தட்ட 50.000 பேருக்கு மேல் பாதுகாவலர் வேலை செய்வதாக kementirian dalam negara (KDN) புள்ளிவிவரம் கூறுகிறது. இதில் ஆச்சிரியம் 70 சகவிதம் நம்மவர்தான் தலைமை பதவியில் இருகிறார்கள். ஆனால் மலைகர்கள் 70 சகவிதம் இந்தியர்கள் 25 சகவிதம் சினன் 5 சகவிதம் உள்ளனர். முடிதிருத்தும் கடையில் 80 சகவிதம் தமிழ் நாடுகரர்கள் வேலை செய்கிறார்கள். காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை நேரம். MC , off day, anuval leve எதுவும் கிடையாது. சம்பளம் வெறும் 600 வெள்ளிதான். முதலாளிக்கு லாபம். மலேசியர்களை வேலைக்கு எடுக்க இந்த முதலாளிக்கு கிறுக்க!