எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கை எதிர்கொள்ளவிருக்கிறார். அதே தினத்தில் அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் அங்கு உரையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடையோ இல்லையோ, அன்வார் உரையாற்றுவது நிச்சயம். தாம் உரையாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி பல்கலைக்கழகம் தமக்குத் தெரியப்படுத்தவில்லை என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
“(தடை செய்யப்பட்டிருப்பினும்) நான் செல்வேன். என்னை தடை செய்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் யுஎம்மின் மிக உயர்ந்த மாணவர் அமைப்பால் அழைக்கப்பட்டிருக்கிறேன். இரவு மணி 9.00 அளவில் நான் யுஎம்மில் இருப்பேன்”, என்றார் அன்வார்.
நீங்கள் கலக்குங்கள் தலைவரே ! எதிர் கட்சிக்காரன் என்ன சும்மாவா ?
தேச நிந்தனையும் கூடவே வருவதாக கேள்வி,வாழ்க நாராயண நாமம்.