கிட் சியாங்: ஹலோ காலிட், மலேசியர்கள் குறைந்த ஞாபசக்தி உடையவர்கள் அல்ல

 

igpசுயேட்சை போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்படுவதற்கு போலீஸ் தரப்பு கடும், ஏன், அச்சம்தருகிற அளவிலான எதிர்ப்பைத் தெரிவித்ததின் விளைவாக முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி ஐபிசிஎம்சிக்கு மாற்றாக பல்லில்லாத இஎஐசி கொண்டு வந்தார்.

நேற்று, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் போலீஸ் “ஐபிசிஎம்சியை எதிர்க்கவே இல்லை”, ஆனால், அதன் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையிடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்படாததால் அது கவலையடைந்திருந்தது என்று கூறியிருந்தார்.

இக்கூற்றுக்கு எதிர்வினையாற்றிய டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் “மலேசியர்கள் குறைந்த ஞாபகசக்தி உடையவர்கள், ஆகவே அவர்கள் போலீஸ் தலைமைத்துவம் ஐபிசிஎம்சிக்கு எதிராக மேற்கொண்ட கடும், ஏன், அச்சம்தருகிற அளவிலான எதிர்ப்பை மறந்து விடுவார்கள் என்று காலிட் நினைக்கக்கூடாது”, என்றார்.

“எந்த ஒரு குற்றத் தீர்ப்புக்கும் எதிராக மேல்முறையீடு செய்ய போலீஸ் படைக்கு உரிமை வழங்கப்பட்டால், போலீஸ் படை ஐபிசிஎம்சி DAP-Lim Kit siangமுன்மொழிதலை ஆதரிக்கும் என்று காலிட் இப்போது கூறுகிறாரா?”, என்று கிட் சியாங் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் வினவியுள்ளார்.

எந்த ஒரு குற்றத் தீர்ப்புக்கும் எதிராக மேல்முறையீடு செய்யும் உரிமையை போலீசுக்கு வழங்கும் ஐபிசிஎம்சி மசோதாவுக்கு மலேசியர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்று கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரான கிட் சியாங் கூறினார்.

ஆகவே, காலிட் மேல்முறையீடு செய்யும் உரிமை வேண்டும் என்ற தமது விருப்பத்தை புத்ராஜெயாவுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் முன்பு தெரிவிக்கப்பட்ட ஆணையத்திற்கு புத்துயிரூட்ட இயலும் என்று அவர் மேலும் கூறினார்.