மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எவ்வளவுதான் வரிந்து கட்டிக்கொண்டு உழலுக்கு எதிராக வேலை செய்து பலர் கைது செய்யப்பட்டதாக செய்தித்தாள்களில் கொட்டை எழுத்துக்களில் விளம்பரப்படுத்திக் கொண்டாலும் இந்தோனேசியாவுடன் ஒப்பிடும்போது இது சப்பென்று இருக்கிறது.
இரண்டு நாடுகளின் ஊழல்-எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிட்ட டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் “மலைக்கும் மடுவுக்குமிடையிலான” வேறுபாடு நிலவுவதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த மாதம் வெளிவந்த செய்தித் தலைப்புகளைச் சுட்டிக்காட்டினார். மலேசியாவில் ஒரு செய்தித் தலைப்பு: ‘சுங்கத் துறை அதிகாரிகள் எண்மர்மீது 28 புதிய குற்றச்சாட்டுகள்’.
அதற்கு ஒரு வாரத்துக்குமுன்னர் இந்தோனேசியாவில் வெளிவந்த செய்தி:‘இந்தோனேசியாவின் முன்னாள் ஆளும்கட்சித் தலைவருக்கு ஊழல், பணத்தைச் சலவை செய்யும் முயற்சி ஆகியவற்றுக்காக எட்டாண்டுச் சிறை’.
இவை தவிர, இந்தோனேசியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் ஜோகோ ‘ஜோகோவி’ வீடோடோ, அமைச்சர்களாக நியமனம் செய்யப்படவிருந்த எண்மருக்கு ஊழல் குற்றங்களில் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதாக ஊழல் ஒழிப்பு ஆணையம்(கேபிகே) தெரிவித்த கணமே அவர்களை அமைச்சர்களாக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.
“மலேசியா உழல் எதிர்ப்பில் இந்தோனேசியாவைவிட பின்தங்கி இருப்பது ஏன் என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கோ எம்ஏசிசி-யோ விளக்குவார்களா. இதுவரை மலேசியாவில் ஒரு ‘பெரிய மீன்’கூட பிடிபடாதது ஏன்?”, என்று லிம் வினவினார்.
கடந்த 33 ஆண்டுகளில் மலேசியாவில் ‘பெரிய மீன்’ எதுவும் குற்றம் சாட்டப்பட்டதாக செய்தி வந்ததில்லை. ஆனால், இந்தோனேசியாவில் இது சர்வ சாதாரணம் என்றாரவர்.
பெரிய மீன்கள் எல்லாம் எம்ஏசிசி யின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார்கள்! இன்னும் எம்ஏசிசி யின் உள்ளே இருக்கிற பெரிய மீன்களைப் பிடிக்க சட்டத்தில் இடமில்லை!
எம்ஏசிசி முடிந்தால் 1MDB-ல் நடக்கும் மூடி மறைக்கும் மந்திரத்தை தூபம் போட்டு கண்டு பிடியுங்கள் பார்ப்போம். கையாலாகாத கபோதிகள். மாமக்திர், ஹுஷ்னி மூலம் இந்நாட்டின் கருவூல நிலையை நன்கு அறிந்து வைத்துக் கொண்டுதான் BR1M தொகையை உடனே நிறுத்த வேண்டும் என்று வலுகட்டாயமாக வற்புறுத்துகின்றார். இல்லேயேல் இந்நாடு திவாலாகும் நிலையில் இருந்து யாரும் காப்பாற்ற முடியாது என்று மாமக்தீர் கூப்பாடு போடுகின்றார். எப்படியும் நிலைமையைச் சமாளித்து விடலாம் என்று இன்றைய பிரதமர் நீச்சல் அடிக்கின்றார். அதற்குப் பதிலாக எண்ணெய் விலையை ஏற்றியது அரசாங்கம். ஆனால் எதிரே பெரியதொரு சூனாமி வந்துக் கொண்டிருப்பதை அவர் அறியவில்லையா அல்ல கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்ற நினைப்பில் இருக்கும் பூனையைப் போன்று இருக்கின்றாரா என்று தெரியவில்லை. கோவிந்தா, கோவிந்தா.
இங்கு நீ என் வாலைமிதித்தல் நான் உன் தலையை மிதிப்பேன் என்ற நிலயில் எப்படி பெரிய மீன்கள் அகப்படும் ?