குதப்புணர்ச்சி வழக்கு II இல் சிறைத் தண்டனையையும் அத்துடன் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டையும் எதிர்பார்ப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாகினிடம் கூறினார்.
குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையிலடைக்கப்பட்டாலும், தாம் நீண்ட காலத்திற்கு சிறையில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அதிகாரிகள் தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் சுமத்தக்கூடும் என்றாரவர்.
மலேசியாகினிவுடன் அன்வார் அவரது புக்கிட் சிகாம்புட் இல்லத்தில் அளித்த சிறப்புப் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
அன்வாரை ஒரு முடிவுகட்டிவிடுவான் கள்.
மறைந்த அதிபர் நெல்சன் மண்டேலா, 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பின்னரே, ஆட்சியில் அமர்ந்தார். ஆக, கவலை வேண்டாம்.
உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் …
தர்மம் தலை காக்கும்.
அப்படி தர்மங்கள் செய்து இருந்து ……
என்றால் ஜனநாயக கொலைக்கும்
அநீதிக்கும் நீதிக்கும்மான போராட்டம்
இன்னும் உங்கள் விசியத்தில் விடியவில்லை !
மலேசியாவிலும் உலக அறிவாளிகள்
கூட்டத்தில் சட்டத்தை விழுங்கும்
கூட்டம் அதிகம் உள்ளது.
மனிதனால் எழுதப்படாத சட்டங்களுக்கு
பேர்தான் சதி. இதற்கு சிலர் மதி காசுக்கு
வேலை பார்க்கும் அது அவன்
விதி.பிரதி வாதிக்கு கதி. இதையெல்லாம்
கணக்கில் வைக்க மீண்டும்
ஒரு ஜென்ம ஓலை ஒன்று உண்டாம்.
அதற்குபபின் ஒரு ஜனனம் பெற
அந்த பல கோடி உயிர்களில் ……..
நானும் அந்த கருவறை இருட்டு நீரில்
கண்ணை பொத்தி எனக்காக போராடினேன்.
அதற்குதான் நீதி தேவதைக்கும்
கண்ணில் கருப்பு துண்டு போலும்?
அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கில் தண்டனை நிலை நிறுத்தப் படுமாயின் அது இந்நாட்டு மலாயக்கார்களுக்கே இழுக்கு. இது வரலாற்றில் நிலை நிறுத்தப் படும். வழக்கறிஞ்சர்கள் அவர் தம் வேலையை நிறைவாகச் செய்யட்டும். சட்டம் அது தன் வேலையை தானே செய்யும்.
சட்டமும் நீதியும் அதிகாரம் படைத்தவர்கள் கைகளில் இருக்கும்போது அதற்க்கு பலியானவர்கள் கசப்புக் கடை ஆடுதான் !
நாளை பெரிய கலவரம் இருக்கிறது… .. மற்றவர்கள் ஆனந்தம் அடைய போகிறார்கள்…
அன்வாரை ஒழித்து கட்டவே எல்லாம்– மேற்கத்திய நாடுகளில் இதெல்லாம் நடக்குமா? அடுத்தகணமே தூக்கி ஏறியப்படுவர்.