துணிச்சல் பெருங்கள், யுஎம்முக்கு அன்வார் அறிவுறுத்தல்

 

Anwar sedition as wellஎதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவர் பயின்ற மலாயா பல்கலைக்கழகத்தை (யுஎம்)இன்று சாடினார்.

நாளை அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்த மாணவர் மன்ற தலைவருக்கு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி கருத்துரைத்த அவர், மாணவர் விவகாரங்களுக்கான யுஎம் உதவி வேந்தர் ரொஹானா யுசுப் மாணவர்களின் உரிமையை மீறுகிறார், ஏனென்றால் மாணவர் மன்றத்தின் தலைவர் பாமி ஸைநோல் மாணவர்களால் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர் என்றார்.

“யூனிவர்சிட்டி மலாயா, பல்கலைக்கழகம் சார்ந்த சுதந்திரத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதவி வேந்தர் அம்னோ கிளைத் தலைவர் போல் பேசுவதை நிறுத்திக் கொண்டு அறிவு சார்ந்த துணிச்சலைக் காட்ட வேண்டும்”, என்று அன்வார் கூறினார்.