அன்வாருடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யுஎம்முக்குள் சென்றனர்

 

umalaya4ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் மலாயா பல்கலைக்கழக வாயிற்கதவை உடைத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர்.

அங்கிருந்து அவர்கள் அன்வாருடன் தேவான் துங்கு சான்செலரை நோக்கி சென்றனர். அங்கு அன்வார் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டுள்ளது.

அன்வார் அவரது குடும்பத்தாருடன் நான்குசக்கர வண்டியில் இரவு மணி 9.40 க்கு அங்கு வந்து சேர்ந்தார்.

தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தின்முன் ஒரு வண்டியிலிருந்து பேசிய யுஎம் மாணவர் மன்றத்தின் தலைவர் பாமி ஸைநோல் யும் தம்மீது கடும் சினம் கொண்டுள்ளது என்றார்.

“நான் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். அதில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவதும் அடங்கும்”, umalaya6என்றாரவர்.

நிகழ்ச்சியை ரத்து செய்ய மாணவர் மன்றம் மறுத்து விட்டத்தை தொடர்ந்து அவர் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவார் என்று யுஎம் முன்னதாக அவரை மருட்டியிருந்தது.

இதனிடையே, அன்வார் தமது உரையைத் தொடங்கினார். பல்கலைக்கழகம் அவர் பேசுவதற்கு தடை விதிக்க எடுத்த முடிவு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

“நான் 16 ஆண்டுகாலமாக கேவலப்படுத்தப்பட்டேன், அவதூறுக்காளாக்கப்பட்டேன். நான் இங்கு பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?”, என்று அவர் வினவினார்.