அரசாங்கம், மலேசியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத மிரட்டல் குறித்து மக்களுக்குத் “தெரிவிக்க” விரைவில் வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
கோ சுங் சென் (டிஏபி-காப்பார்)-னின் வினாவுக்கு இவ்வாறு பதிலளித்த உள்துறை அமைச்சு, அறிக்கை “தயாராகி வருவதாக”க் கூறியது. ஆனால், அது எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை அது குறிப்பிடவில்லை.
2001-இலிருந்து இதுவரை 167 மலேசியர்கள் வெளிநாடுகளில் ஆயுதப் போராட்டங்களில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் 39 பேர் ஈராக்கிலும் சீரியாவிலும் ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதக் கும்பல்களுடன் சேர்ந்துகொண்டிருப்பதாகவும் அமைச்சு கூறிற்று.