அல்வின், அலி ஆகியோரைக் கைது செய்ய இண்டர்போல் உதவி நாடப்படுகிறது

interpolஅரசியல்   அடைக்கலம்  தேடி  வெளிநாடு  சென்றுள்ள  அலி அப்ட்  ஜலில், அல்வின்   டான்  ஆகியோரின்  இருப்பிடம்  அறியவும்  அவர்களைக்  கைது  செய்யவும்  போலீசார்  அனைத்துலகப்  போலீசான  இண்டர்போலின்  உதவியை  நாடியுள்ளனர்.

இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு பக்கார் இதனைத்  தெரிவித்தார்.

மூன்று  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டின்  பேரில்  நான்கு  தடவை  கைது  செய்யப்பட்டு  22  நாள்கள்  தடுப்புக் காவலில்  வைக்கப்பட்ட  சமூக  ஆர்வலரான  அலி, சுவீடன்  நாட்டில்  அரசியல்  அடைக்கலம்  கோரியுள்ளார்.

பல  தடவை  கொலை  மிரட்டலை  எதிர்நோக்கியதால்  நாட்டைவிட்டு  வெளியேறியதாக  அவர்  சொன்னார்.

இணையத்தில்  சர்ச்சைக்குரிய  விசயங்களைப்  பதிவிட்டதற்காக  அல்வின்  லீ-மீதும்  அவரின் தோழியான விவியான்  லீ மீதும்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழும்  திரைப்பட  தணிக்கைச்  சட்டத்தின்கீழும்  குற்றம்  சாட்டப்பட்டது.

செப்டம்பர்  24-இல்,  அல்வின், விவியானை விட்டுவிட்டு  அமெரிக்காவுக்குத்  தப்பி  ஓடினார்.