செபராங் பிறை செலாத்தான், பத்து கவானில், கம்போங் மஸ்ஜித்தில் உள்ள எட்டு வீடுகளில் விரிசல்கள் தோன்றியிருப்பதற்கு அருகில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகள்தான் காரணம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (கேப்) கூறுகிறது.
குவாரியில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகளால் சுமார் 200 குடியிருப்பாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே பிரச்னைகளை எதிர்நோக்கி வந்திருப்பதாகவும் அண்மைய மாதங்களில் பிரச்னைகள் மேலும் மோசமடைந்திருப்பதாகவும் கேப் தலைவர் எஸ்.எம். முகம்மட் இட்ரிஸ் கூறினார்.
“வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போக கல்லுடைப்பு நடவடிக்கைகளால் தூசு தூய்மைக்கேடு, மண்ணரிப்பு, பயிர்களுக்கு இழப்பு முதலிய கேடுகளும் விளைந்திருப்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது”, என்றாரவர்.