தம்மை அரசியலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சதி பற்றி அன்வார் குற்றவாளிக் கூண்டிலிருந்து விடுத்த அறிக்கைக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் முறையான மதிப்பளிக்கத் தவறி விட்டன என்று அன்வாரின் தற்காப்பு குழு நீதிமன்றத்தில் கூறியது.
இவ்விவகாரம் குறித்து அவ்விரு நீதிமன்றங்களும் தலா ஒரு பத்தி மட்டுமே அவற்றின் தீர்ப்பில் ஒதுக்கியிருந்தன என்று வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார்.
சைபுல் மூத்த போலீஸ் அதிகாரி முகமட் ரோட்வான் முகமட் யுசுப்பை சந்தித்ததை ஒப்புக்கொண்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது என்றாரவர்.
போலீஸ்காரர் முகமட் ரோட்வான் தம்மை அவரது தொலைபேசியில் அழைத்ததையும் அதன் பின்னர் அவர்கள் இருவரும் கொன்கோர்ட் ஹோட்டலில் ஜூன் 24, 2008 இல் சந்தித்ததை புகார்தாரரான சைபுல் ஒப்புக் கொண்டுள்ளார் என்று சுரேந்திரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அன்றிரவே சைபுல் அன்றைய துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது தாமான் டூத்தா இல்லத்தில் சந்தித்துள்ளார்.
“சைபுல்லின் கைத்தொலைபேசி எண் எப்படி முகமட் ரோட்வானுக்கு கிடைத்தது. அவர்கள் ஹோட்டல் முகப்பு அறையில் சந்திக்கவில்லை, ஹோட்டல் அறையில் சந்தித்தனர். குதப்புணர்ச்சி சம்பவம் நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு சைபுல் நஜிப்பை சந்தித்துள்ளார்.
“அடுத்த நாள். சைபுல் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானை அழைத்துள்ளார். அதன் பின்னர் அவர் எஸாம் முகமட் நூரையும் மும்தாஸ் ஜாப்பாரையும் ஜூன் 27 இல் சந்தித்துள்ளார்.
“குதப்புணர்ச்சி சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளிலிருந்து இரு நாட்களுக்குப் பிறகுதான் சைபுல் போலீஸ் புகார் செய்தார்”, என்றார் சுரேந்திரன்.
தம்மை சிக்க வைப்பதற்காக சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அன்வார் குற்றவாளிக் கூண்டிலிருந்து கூறியதை சைபுலின் சாட்சியம் உறுதிப்படுத்துகிறது என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.
அன்வாரின் அறிக்கை சத்தியப்பிரமாணம் செய்யப்படாதது என்றாலும், நீதிமன்றம் அதற்கு மதிப்பளித்திருக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கக் கூடாது என்றாரவர்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விட்ட புகார்தாரரான சைபுல் தமது தீய நோக்கத்தை அடைய இதனை (குதப்புணர்ச்சி சம்பவத்தை) பயன்படுத்திக் கொண்டார் என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.
குதப்புணர்ச்சிக்கு உடன்பாடு இருந்ததா, இல்லையா?
இந்த குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்து கடுமையான கேள்வி எழுகிறது என்று இந்த வழக்கில் அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவரான முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் கூறினார். இந்த குதப்புணர்ச்சிக்கு இரு தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு இருந்ததா, இல்லையா என்பதுதான் கேள்வி என்றாரவர்.
“இதற்கு உடன்பாடு இல்லை என்று சைபுல் கூறிக்கொண்டார். ஆனால் உடன்பாடான குதப்புணர்ச்சிக்காக அன்வார் மீது குற்றம் சாட்டப்படுள்ளது. சட்டப்படி, கூறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில்தான் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது”, என்று ஸ்ரீராம் வாதிட்டார்.
குற்றச்சாட்டில் காணப்படும் இந்த முரண்பாடு காரணமாக அன்றைய வழக்குரைஞர் கர்பால் சிங், சைபுல்லின் எச்சரிக்கப்பட்ட அறிக்கை வேண்டுமென மனு செய்திருந்தார் என்று ஸ்ரீராம் கூறினார்.
ஆனால், அந்த எச்சரிக்கப்பட்ட அறிக்கையை வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றாரவர்.
“குற்றச்சாட்டை நிர்ணயிப்பதற்கு அந்த அறிக்கை இன்றியமையாதது. வேறொரு சட்டவிதியின் கீழ் குற்றம் சாட்டுவதன் மூலம் சைபுல் குற்றம் சாட்டப்படும் அபாயத்திற்குள்ளாகிறார்”, என்று ஸ்ரீராம் எச்சரிக்கை விடுத்தார்.
ஏன் ஜெல்லியை கொண்டு வந்தார்?
குதப்புணர்ச்சிக்கு உடன்பாடு இல்லை என்று அவர் கூறிக்கொள்ளும் போது, புகார்தாரர் ஏன் வழவழப்பு தரும் ஜெல்லியை சம்பவம் நடந்த அன்று தம்முடன் கொண்டு வந்தார் என்று ஸ்ரீராம் வினவினார்.
“இது அவர் ஒரு சாட்சியாளர் என்ற முறையில் அவரது நம்பக்கூடிய தன்மைக்கு சவால் விடுகிறது”, என்றாரவர்.
அன்வாரின் மேல்முறையீடு விசாரணை நாளை தொடர்கிறது. எதிர்தரப்பு வழக்குரைஞர்களான சுரேந்திரன், ராம் கர்பால் சிங் மற்றும் சங்கீதா கௌவுர் டியோ ஆகியோர் தங்களுடைய வாதங்களை முன்வைப்பார்கள்.
அதன் பின்னர், அரசு தரப்பு மூத்த வழக்குரைஞர் முகம்மட் ஷாப்பி அப்துல்லா பதில் அளிப்பார்.
கவனிக்க தவறவில்லை,கவனிக்காதது போல் இருந்துவிட்டார்கள்.
அன்வர் ஏன் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற காரணம் முதலில் விலங்கவேண்டியது அன்ருக்கே,வாழ்க நாராயண நாமம்.
இந்த வழக்கை படிப்பதற்கு மனம் கூசுகிறது, ஜெல்லி எல்லாம்
இடம்பெறுகிறது. நம்மை இழிவு படுத்திய சமுகம் தானாகவே
இழிவுபடுகிறது.