பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை நேற்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி இன்று இரண்டாவது நாளாக காலை மணி 9.40 க்கு தொடங்கியது.
இன்றைய விசாரணையில் அன்வாரின் சார்பில் வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன், ராம் கர்பால் சிங் மற்றும் சங்கீதா கௌவுர் டியோ ஆகியோர் தங்களுடைய விவாதங்களை முன்வைப்பார்கள்.
அன்வார் தற்காப்பு குழுவின் தலைவர் ஸ்ரீராம் கோபால் இன்று நீதிமன்றத்திற்கு வருவதற்கு சற்று தாமதமாகும் என்று அவர் நேற்று நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.
இந்த மேல்முறையீடு விசாரணையை தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு செவிமடுக்கிறது.
இன்றும் அன்வார் ஆதரவாளர்கள் காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயாவிலுள்ள நீதிமன்ற வளாகத்தின் முன் கூடத் தொடங்கி விட்டனர்.
இன்றும் போலீசார் அதிக அளவில் காணப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணை அறையும் நிரம்பியிருந்தது.
காலை மணி 8.57 க்கு அன்வார் இப்ராகிம் அவரது குடும்பத்தாருடன் வந்து சேர்ந்தார்.
காலை மணி 9.40 க்கு தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா முன் விசாரணை தொடங்கியது.
தமது வாதத்தை முன்வைத்த என். சுரேந்திரன் குற்றவாளிக் கூண்டிலிருந்து அன்வார் அளித்த அறிக்கைக்கு மதிப்பு இருக்கிறது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்கான நிபுணத்துவ ஆதாரங்களை நேற்று நீதிமன்ற கேட்டுக்கொண்டவாறு இன்று முன்வைத்தார்.
இந்த வழக்கில் அன்வார் மட்டுமே குற்றவாளிக் கூண்டிலிருந்து அறிக்கை அளித்தார். அவரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.
(மேல்முறையீட்டு) நீதிமன்றம் டாக்டர் முகமட் ஓஸ்மானின் அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அது சைபுல்லின் அறிக்கைக்கு முரணானதாக இருந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் அன்வாரின் சாட்சியத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என்று சுரேந்திரன் கூறினார்.
“அது (அன்வாரின் சாட்சியத்திற்கு மதிப்பளிக்காதது) தவறானதாகும். அது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை அவசியமாக்குகிறது”, என்று சுரேந்திரன் கூறினார்.
அடுத்து, சங்கீதாவும் ராம் கர்பாலும் மரபணு மீதான தங்களின் வாதத்தை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நீதி நேர்மை நியாயம் என்றிருந்தால் இந்நாடு இவ்வளவு பிளவு பட்டு இருக்காது. எல்லாம் அம்னோ குஞ்சுகளின் கையில் இருக்கும் போது-ஏதும் நடக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்க்கு.
எல்லோர் மனதிலும் இந்த நீதி நேர்மை வாழ்கிறதா,தியாக சிந்தனை இருக்கிறதா,சுயனலம் ஓங்கி கான்கிறது,நாராயண நாராயண.