பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்), அது இஸ்லாத்துக்கு எதிரான கட்சி என்ற தோற்றப்பாட்டைத் திருத்தி அமைக்க முயலும்.
இதன் பொருட்டு அது “இஸ்லாமும் சோசலிசமும்” என்னும் சிறு விளக்கநூலை வெளியிடும் என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் கூறினார். அந்நூல் தொழிலாளர் விடுதலை பற்றி நபிகள் நாயகம் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
அதிகமான மலாய்க்காரர்கள் உறுப்பினர்களாகி வருவதால் அக்கட்சி இம்முயற்சியில் இறங்கியுள்ளது.
கேட்பதற்கு இது நல்லா இருக்கு. நம்ப உலாமாக்களுக்கு எப்படி இருக்குமோ?.
இந்த கட்சியின் தலைவர் நாசீர் தானே,என்.ஜி.ஓ,வாக இருந்தபோது விருவிருப்பாக செயல்பட்ட இந்த இயக்கம் இன்று மதம் பிடித்த யானைபோல் கர்வியாக செயல்படுகிறது,எனவே முயற்சி வெற்றிபெற வாழத்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.