தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய பெரும் தொகைகளை உள்ளடக்கிய கடன்கள் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிய செர்டாங் எம்பி ஒங் கியான் மிங், அரசு-தொடர்புடைய நிறுவனங்களின்(ஜிஎல்சி) நிலவரமும் அதேதான் என்கிறார்.
அவை அரசாங்கத்திடம் பட்டுள்ள பல பில்லியன் ரிங்கிட் கடன்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. புத்ரா ஜெயாவும் வரவேண்டியதைத் திரும்பப் பெற முயற்சி செய்வதாக தெரியவில்லை.
ஆனால், சாதாரண மலேசியர்கள் தேசிய உயர்க்கல்வி கடனுதவி நிதியிடம் வாங்கிய கடன்களைத் திரும்பப் பெறுவதில் மட்டும் அரசாங்கம் தீவிரம் காட்டுகிறது என ஒங் கூறினார். இவர்களின் கடன்களை நிறுவனங்களின் கடன்களுடன் ஒப்பிட்டால் இது மிகச் சாதாரணமானது.
“2012 முடிய இந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் பட்டிருந்த கடனின் அளவு ரிம4.5 பில்லியன்”, என்றவர் கூறினார்.
அந்நிறுவனங்களில் இண்டா வாட்டர் கொன்சொர்டியமும் ஒன்று. அது ரிம2 பில்லியனுக்குமேல் அரசாங்கத்துக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், ‘சல்லி காசுகூட’ இதுவரை திருப்பிக் கொடுத்ததில்லை என ஒங் கூரினார்.
ஒரு டன் லோரி வைத்திருந்து விற்று 3 ஆண்டுகள் ஆகின்றன,இப்போது வருமான வரி கட்ட சொல்லி சூரா
அனுப்புகிறார்கள்.