சமூக ஊடகக் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதும் அபராதம் விதிப்பதும் போதாது. தண்டனையைக் கடுமையாக்கி பிரம்படியும் கொடுக்க வேண்டும் என பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அஹ்மட் லாய் பூஜாங்(பிஎன் -சிபுட்டி) முன்வைத்த இப்பரிந்துரையை அவரின் சகா தியோங் கிங் சிங் (பிஎன் -பிந்துலு) ஆதரித்தார்.
“இதையும் சட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்”, என அஹ்மட் கூறினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப், ஊடகக் குற்றவாளிகளைச் சட்டப்பூர்வமாக தண்டிக்கும் அதிகாரம் தம் துறைக்குக் கிடையாது என்றார்.
எந்த மாதிரியான குற்றங்கள்? அது குற்றங்களா? அல்லது உண்மை கூறும் செய்திகளா? எல்லாவற்றுக்கும் அடி உதய் சிறை இதுவே இப்போதைய நிலை.
இலஞ்சம், ஊழல் குற்றங்கள் புரிபவர்களுக்கு குறைந்தது 10 கடும் கசையடியாவது கொடுத்து, அவர்கள் சொத்து முழுவதும் ஜப்தி செய்யப்பட்டு, இறக்கும் வரையிலான சிறை தண்டனை கொடுக்க வேண்டும். நாடு எப்படிப்பட்ட அமைதி பூங்காவாக மாறும்..!! என்ன MP சரிதானே..?
லஞ்சம் வாங்குவோரை முதலில் கையை வெட்டவும் .