முன்னாள் நீதிபதிகள் வழக்குரைஞர்களாக மாறி வாதாடுவதைத் தடுக்கும் வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ஒன்றும் சட்டமல்ல. அது, கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக வாதாடுவதை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது.
இவ்வாறு குறிப்பிட்ட சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, வழக்குரைஞரைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பதைக் கூட்டரசு அரசமைப்பு வலியுறுத்துவதாகக் கூறினார்.
அரசமைப்புத்தான் நாட்டின் அதியுயர் சட்டமாகும். அதை மிஞ்சும் சட்டம் எதுவும் கிடையாது. என்றாரவர்.
“வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ஒரு சட்டமாகக்கூட இல்லை”, என அசீஸ் பாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சட்டம் தெரியாத அம்னோக்காரர்கள் ஆரவாரம் செய்வது இயல்பானது தானே.
ஐயா, அஜிஸ் பாரி நீங்கள் ஒரு சிறந்த பேராசிரியர் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். வாழ்த்துக்கள்.