கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட “அல்லா” என்ற சொல்லைக் கொண்ட பொருள்களை விடுவிக்குமாறு உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிட் உத்தரவிட்டுள்ளார்.
அப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தமது அமைச்சுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், அது கஸ்டம்ஸ் இலாகாவின் செயல் என்றும் அந்த இலாக நிதி அமைச்சின் கீழ் வருகிறது என்றும் அவர் கூறினார்.
“அப்பொருள்கள் இந்தோனேசியாவிலிருந்து வந்தன. சபாவுக்கு அனுப்பப்படுவதற்காக அவை கேஎல்ஐஎவில் இறக்கப்பட்டன.
“அப்பொருள்கள் சபாவில் பயன்படுத்தப்படுவதற்கானவை என்பதால், அவை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்”, என்பது உள்துறை அமைச்சின் கருத்தாகும் என்றாரவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சபாகான் ஆயரிடமிருந்து 574 சமய நூல்களும், 419 சிடிகள் மற்றும் 5 சிவிடிகள் கைப்பற்றப்பட்டன.
சிலருக்கு மனோவியல் ரீதியாக ஏற்படும் ஒரு குறை – தங்களால் அடுத்தவருக்கு துன்பம் ஏற்படுத்தக் கூடிய அதிகாரம் இருந்தால், அடுத்தவருக்கு துன்பம் ஏற்படுத்தி அதனால் ஒருவித இன்ப கிறக்கம் அடைதல். இதனை சாடிசம் என்பர். umnob ஊட்டும் BTN-மார்க் இன-மத மேலாண்மை ஊட்ட மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக அடிக்கடி உண்பதால் அரசு அதிகாரிகள் அநேகர் இந்த சாடிசம் நோய் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவுவதால் சாகித் ஹாமித் போன்ற தீவிரம் ஊட்டு மாத்திரை வியாபாரிகள் அரசியலில் நல்ல பலன் பெறுகின்றனர். நாட்டு ஒற்றுமைக்கு மெத்த குந்தகம். ஆனால் அதுபற்றி இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை.
சபா கோரிக்கை கண்டு பயம் ,