பெர்சே: யுஎம் தாக்குதளுக்கு எதிராக சுதந்திரம் தற்காக்கப்பட வேண்டும்

 

Defend freedom3மலாயா பல்கலைக்கழகம் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்பான பெர்சே மாணவர்களின் சுதந்தரத்தைத் தற்காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

கடந்த திங்கள்கிழமை மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதனை நடத்திய மாணவர் மன்றத்தின் தலைவர் ஃபாமி ஸைநோலுக்கு எதிராக யுஎம் நடவடிக்கை எடுக்க விருப்பது குறித்து கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார்.

ஃபாமியுடன் இதர எட்டு மாணவர்களும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

“அக்டோபர் 27 இல், இளைஞர்கள் இன்னும் பல ஃபாமிகள் இருக்கின்றனர் என்பதை நிரூபித்துள்ளனர்.

Defend freedom2“மாணவர்களுக்கு எதிரான இது போன்ற தாக்குதல்களை நிறுத்துவதற்கு மலேசியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதோடு நாம் ஒன்றிணைந்து நமது சுதந்திரத்தை தற்காத்து பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்”, என்று மரியா சின் கூறினார்.

மாணவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை “நகைப்புக்குரியது” என்று வர்ணித்த மரியா, அது கூட்டம் கூடுவது மற்றும் கருத்துரைப்பதற்கான சுதந்திர கோட்பாடுகளுக்கு முரணானது என்றார்.