கிட் சியாங்: ஒன்றுக்கும் உதவாத பிஎன் உச்சமன்ற கூட்டம்

 

Rare BN Meet1நாட்டில் நிகழ்கின்ற சில முக்கியமான விவகாரங்கள் பற்றி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தத் தவறிய பாரிசான் பங்காளித்துவ கட்சிகளை இன்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடினார்.

“நேற்றிரவு, பிஎன் உச்சமன்றம் அதன் அபூர்வமான கூட்டங்களில் ஒன்றை நடத்தியது. அது ஒரு பெரிய ஏமாற்றமே. ஏனென்றால் அம்னோ-அல்லாத கட்சிகள், அவை மசீச, கெராக்கான், மஇகா அல்லது சாபா, சரவாக் ஆகியவற்றிலிருந்து வந்தவைகளானாலும் சரி, பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் பற்றி பிஎன் அரசாங்கம் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று கேட்கும் துணிச்சலற்றவைகளாக இருந்தன”, என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

மிகுந்த சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஒன்று பைபிளை எரிக்க பெர்காசா விடுத்த அறைகூவல் என்று கூறிய கிட் சியாங், “அந்தKit Siang அறைகூவலை விடுத்த பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) எடுத்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மட்டு மீறிய முடிவு”, என்றார்.

இதர முக்கியமான விவகாரங்களில் அரசாங்கம் மேற்கொண்ட “வலுவற்ற ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலாக்கப்பட விருக்கும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி தள்ளிப்போட வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோள்கள் என்றாரவர்.

பிஎன் உச்சமன்ற கூட்டம் பிஎன்னில் அம்னோவின் ஆளுமைக் காட்டும் மேடையாக இருக்கிறே தவிர வேறொன்றுமில்லை என்று கூறிய அவர், இதர பங்காளிக் கட்சிகள் அதிகார மிக்க பெரிய அண்ணன் சொல்வதைக் கேட்பதற்கும் அடிபணியவதற்காக மட்டுமே இருக்கின்றன என்றார்.