திண்டாக் மலேசியா விரைவில் மலேசிய தேர்தல் தொகுதிகளின் வரைபடங்களை இணையத்தில் வெளியிடும்.
ஒரு என்ஜிஓ-வின் தன்னார்வர்கள் கைப்பணத்தைச் செலவிட்டு வரைபடங்களை உருவாக்கி இணையத்தில் போட முடியுமானால் பல மில்லியன் ரிங்கிட் வ்சதியுள்ள தேர்தல் ஆணையம்(இசி) அவ்வாறு செய்ய தடை ஏதுமில்லை என்பதைக் காண்பிக்கவே அவ்வாறு செயவதாக திண்டாக் மலேசியா நிறுவனர் பை வோங் கூறினார்.
“இது நியாயமான எதிர்பார்ப்புத்தான். எல்லோரும் பார்ப்பதற்கு வசதியாக அந்த வரைப்படங்களை இசி போட வேண்டும் என எதிர்பார்ப்பதில் தப்பில்லை.
“இசி-தான் வெளிப்படைத்தன்மை பற்றியும், செயல்திறமை பற்றியும் நிறைய பேசுகிறதே. அதுதானே அதன் வலைப்பதிவின் முத்திரை வாசகம்”,என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
மலேசிய தேர்தல் தொகுதிகளின் வரைபடங்களை “இசி” மக்களிடம் வெளிப்படையாக காட்டலாமே, இதில் என்ன தவறு இருக்கிறது ?
சிஸ்டம் அல்லாத ஊரு.மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வாங்க …..