பிபிஎஸ் சொத்துகள் முடக்கப்படும்

ppsபினாங்கு மாநில  அரசால் உருவாக்கப்பட்ட  தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)-யின்  வங்கிக்  கணக்கும்  சொத்துகளும்  முடக்கப்படும்.

அது  ஒரு  சட்டவிரோதமான  அமைப்பு  என    அறிவிக்கப்பட்டிருப்பதை  அடுத்து  இவ்வாறு  செய்யப்படுகிறது.

உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,  1966ஆம்  ஆண்டு சங்கங்கள்  சட்டப்படி  பிபிஎஸ்   சட்டத்துக்குப்  புறம்பான  அமைப்பு  என  நேற்று  அறிவித்ததாக  அமைச்சின்  தலைமைச்  செயலாளர்  முகம்மட்  காலிட்  ஷரிப்  கூறினார்.