பாக்’ லா: பைபிளை எரிக்காதீர்

abdullaமுன்னாள்  பிரதமர் அப்துல்லா  அஹ்மட் படாவி,  பைபிளை  எரிக்கும்  வேலையெல்லாம் கூடாது  என்பதை  வலியுறுத்தினார்.

பெர்காசா  தலைவர் இப்ராகிம்  அலி  இஸ்லாத்தின்  புனிதத்தைக் காக்கத்தான்  பைபிளை  எரிக்க  வேண்டும்  என்றார்  என்பதால்  அவர்மீது  நடவடிக்கை  எடுப்பதில்லை  என  அரசாங்கம் முடிவு  செய்திருப்பது  பற்றிக்  கருத்துக் கேட்கப்பட்டதற்கு  அவர்  இவ்வாறு  கூறினார்.

“பைபிளை  அவர்களே  வைத்துக்கொள்ளட்டும். அதை  எரிக்காதீர்”,என்று  அப்துல்லா  கேட்டுக்கொண்டார்.

ஆனால், அவ்விவகாரம்  பற்றிச்  சரியாக  தெரியாததால்  அதைப்  பற்றி  மேலும்  கருத்துரைக்க  அவர்  விரும்பவில்லை.

“உண்மையில்  சொல்லப்பட்டது  என்ன  என்பது  எனக்குத்  தெரியாது.

“நான்  ஒன்றைச்  சொல்லி, அவர்  வேறொன்று  சொல்லியிருந்தால்  நன்றாய்  இருக்காது”, என்றாரவர்.