சிலாங்கூர் எம்பி கபடதாரிகளின் அப்பன், நோ கூறுகிறார்

nohசர்ச்சைக்குரிய  கின்ராரா-டமன்சாரா  விரைவுசாலை  திட்டம்  தொடர  அனுமதி  கொடுத்துள்ள  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலி “கபடதாரிகளுக்கெல்லாம்  அப்பன்”  என்று  மாநில  அம்னோ வருணித்துள்ளது.

அஸ்மின்  மக்களுக்குச்  சேவையாற்றப்போவதாகக்  கொடுத்த  வாக்குறுதியை  மறந்து  சுய  ரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளார்  என  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமார்  கூறினார்.

அஸ்மின் கிடெக்ஸ் ஒப்பந்தத்தைத்  தொடர  முடிவு  செய்திருப்பது  பற்றிக்  கருத்துரைத்த  நோ, ‘அஸ்மினிடம்  பேச்சுத்தான்  செயல் இல்லை’ என்றார்.

“இதைத்தான்  கபடத்தனம்  என்பது. பக்கத்தான்  தலைவர்கள்  எல்லாருமே  இப்படித்தான். அஸ்மின் அந்தக்  கபடதாரிகளுக்குத்  தலைவர்”, என  நோ  எஸ்ட்ரோ  அவானியிடம்  கூறினார்.

அப்துல் காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலக  வேண்டும்  என்று  கூறப்பட்டதற்கு  இந்தக்  கிடெக்ஸ்  சர்ச்சையும் ஒரு காரணமாகும்.