நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், மலேசியப் பொருளாதார மேம்பாடு கண்டு பொறாமை கொள்கிறாராம். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“நேற்று, நெதர்லாந்து பிரதமரைச் சந்தித்தபோது நம்முடைய பொருளாதார முன்னேற்றம் அவருடைய நாட்டினுடையதைவிட சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“அவர் சொன்னதை அப்படியே எடுத்துச் சொல்கிறேன் -உங்கள் பொருளாதார அடைவுநிலை கண்டு பொறாமை கொள்கிறேன்”, என நஜிப் கூறினார்.
கொல்லைப் புறத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் சொல்லிவிட்டார் , டச்சுப் பிரதமர் !
உள்ளே உள்ள விஷயத்தை தெரிந்தால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்.
நேற்று வந்தவனுக்கு எப்படி தெரியும் நாட்டு நடப்பு ?