மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுள்ளது. ஆனால், 1BestariNet-டை மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே பயன்படுத்துகிறார்கள் என்கிறார் டிஏபி-இன் சைருல் கீர் ஜொகாரி.
“இதனால். இதற்கும் பிபிஎஸ்எம்ஐ- திட்டத்துக்கு ஏற்பட்ட நிலைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு உதவும் ஐடி வன்பொருள்கள் வாங்குவதற்கு ரிம3 பில்லியனுக்குமேல் செலவிடப்பட்டது. அவப்பேறாக, அப்பொருள்களில் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் பள்ளிக் கிடங்குகளில் கிடக்கின்றன”, என்றாரவர்.
ஈராண்டுகளுக்குமுன் கொண்டுவரப்பட்டது 1BestariNet திட்டம். இதுவரை 8,886 பள்ளிகளில் 1BestariNet வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மூன்று விழுக்காடு மாணவர்களே அம்முறையைப் பயன்படுத்துவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இத்திட்டத்தை நிர்வகிக்கும் குத்தகை ஒய்டிஎல் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அக்குத்தகை நீட்டிக்கப்படுமா என்பதைக் கல்வி அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி-இன் தேசிய பிரச்சாரப் பகுதி உதவிச் செயலாளரான சைருல் கூறினார்.
“அதே வேளை, இத்திட்டத்தை மேலும் பலர் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் பொதுமக்களின் வரிப்பணம் மற்றுமொரு பூதாகரமான திட்டத்தில் வீணாவதைத் தடுக்கவும் என்ன செய்ய உத்தேசம் என்பதையும் அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
1BestariNet திட்டம் கண்டிப்பாக ஒரு தோல்வியை தழுவிய திட்டம்தான்.பெரும்பாலும் பள்ளிகளில் பொருத்தப்பட்டிருக்கும் இவ்விணைய வசதி சேவையானது அதன் நோக்கத்தை எட்டவில்லை என்பதே உண்மை.இணையத் தொடர்பு அடிக்கடி துண்டாவதும்,ஒரு அகப்பக்கத்தில் நுழைவதற்கே அரை மணி நேரம் ஆவதும் இதன் பலவீனங்களில் குறிப்பிடத்தக்கது. 1Mbps ஏறக்குறைய 200 ரிங்கிட் மலேசியா கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு செலுத்துகின்றது.ஒரு மாதத்திற்கு 300 mb மட்டுமே பள்ளிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாவாகும்.இவ்வாறு இருக்கும் போது மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வாறு இணையத்தைச் சீராகப் பயன்படுத்துவது.ஆனால்,ஒன்று மட்டும் நிச்சயம். பணம் யாரோ கையில் விளையாடி இருக்கின்றது.