கனிமநீர் போத்தலில் இந்து தெய்வ உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தைத் தேசிய நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் சொல்லியிருப்பது அறிவுடைமையாகாது.
இவ்வாறு குறிப்பிட்ட சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசீஸ்,“நிறுவனத்தின் நிர்வாகியைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்களா? எனக்குப் புரியவில்லை”, எனச் சிரித்தார்.
“நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“உங்களுக்குப் பிடிக்கவில்லையா, சொல்லுங்கள். அதை அப்புறப்படுத்தி விடுவோம்”, என்றாரவர்.
தெய்வ உருவத்துக்குப் பக்கத்தில் ஹலால் முத்திரை இடப்பட்ட லேபலை உருவாக்கிய நிறுவனம் தீய நோக்கத்தோடு அவ்வாறு செய்யவில்லை என்பதை நஸ்ரி வலியுறுத்தினார்.
வர வர நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எதுவுமே சரியா படல!!! இதுவெல்லாம் எங்கே போய் முடியும்னு தெரியல!!!
நன்றாக சிரித்துவிட்டு காரி துப்புங்கள் .