உதவித்தொகை அகற்றப்படுவதை 72விழுக்காட்டினர் ஆதரிக்கவில்லை

studyஅண்மையில்  மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு  ஒன்று  எரிபொருளுக்கும்  மின்சாரத்துக்கும்  கொடுக்கப்படும்  உதவித்  தொகை  அகற்றப்படுவதை  விரும்பவில்லை எனக்  காண்பிக்கிறது.

மலேசிய  தண்ணீர்,  எரிபொருள்  ஆராய்ச்சி  சங்கம்(ஏவர்), தேசிய நடத்திய  ஆய்வில்,  ஆய்வில்  கலந்துகொண்டோரில்  27 விழுக்காட்டினர்  மட்டுமே  எரிபொருள், மின்சார  உதவித்  தொகைகளைக் குறைக்கவும்  சீரமைக்கவும்  அரசாங்கம்  மேற்கொள்ளும்  முயற்சிகளுக்கு  ஆதரவு  அளிப்பது  தெரிய  வந்தது.

உதவித் தொகை  குறைப்புக்கு  மிகுந்த  எதிர்ப்பு பினாங்கில்தான்  பதிவானது. அங்கு  82 விழுக்காட்டினர்  எதிர்ப்புத்  தெரிவித்தனர். அதற்கு  அடுத்து  சிலாங்கூரில், 81 விழுக்காட்டினர். மூன்றாவது  இடம்  கோலாலும்பூருக்கு , 80 விழுக்காட்டினர்  உதவித்  தொகை குறைக்கப்படுவதை  விரும்பவில்லை.

அதை  அதிக  ஆதரவு  கிடைத்த  இடம்  புத்ரா  ஜெயா. 46 விழுக்காட்டினர்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். அதற்கு  அடுத்து  பகாங்,  நெகிரி  செம்பிலான், சரவாக்  ஆகிய  மாநிலங்களில்  அதிக  ஆதரவு  இருந்தது.

ஆதரவு  தெரிவிக்காதவர்களில்  பலர்,   உதவித் தொகை  பெறுவது  குடிமக்கள் என்ற  முறையில்  தங்களின்  உரிமை  என்று  நினைப்பதாக   ஏவர்  தலைவர்  எஸ்.பிரபாகரன்  கூறினார்.