பெடரல் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் அன்வார் மேல்முறையீட்டு விசாரணை நாளை பிற்பகல் மணி 3.00 மீண்டும் தொடங்கும். அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவர் ஸ்ரீராம் அவரது வாதத்தை தொடர்வார்.
சைபுல்லை முதலில் சோதணை செய்த புஸ்ராவி மருத்துவமனையின் டாக்டர் ஓஸ்மான் தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்கு இல்லாததால் தாம் அவரை தற்காப்பதாக ஸ்ரீராம் நீதிபதிகளிடம் கூறினார்.
“அவர் (ஓஸ்மான்) ஓர் அந்நியர் என்பதால் அவரை ஒரு மருத்துவராக பணியாற்ற (நமது) நாடு அழைத்திருந்தது. அவரது சேவைக் காலம் முடிவுற்றதும் அவர் தாயகத்திற்கு சென்று விட்டார். வாதியாக்கு (அன்வார்) ஆதரவாக செயல்பட வேண்டிய நோக்கம் ஏதும் அவருக்கு இல்லை.
“(சைபுல்லின் குதத்திற்குள்) ஒரு பிளாஸ்டிக் பொருள் நுழைக்கப்பட்டிருந்ததாக அவரது (ஓஸ்மான்) குறிப்புகள் கூறுகின்றன”, என்று ஸ்ரீராம் மேலும் கூறினார்.
அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞர் முகமட் ஷாபி மேற்கோள் காட்டியிருந்த இந்தியாவின் “தண்டூர்” வழக்கின் சட்டப்பிரிவு வேறுபட்டது. அதை இங்கு பயன்படுத்தலாகாது என்றாரவர்.
தொடக்கத்தில், அன்வார் 13 சாட்சிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலைக் கொடுத்திருந்தார். ஆனால் எவரையும் அழைக்க முடியவில்லை. அன்வாருக்கான சாட்சிகள் அழைக்கப்படாததற்கான காரணத்தை கூறிய ஸ்ரீராம், கொண்டோ உரிமையாளர் ஹசானுடின் வரவில்லை ஏனென்றால் அவர் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்றார்.
“எங்களுடைய தற்காப்பு சாட்சிகள் கீழறுப்புக்கு ஆளானதால் அவர்கள் சாட்சியமளிக்க முன்வர முடியாமல் போய்விட்டது”, என்றார் ஸ்ரீராம்.
அவரது வாதம் நாளை தொடரும்.
தர்மம் சரணம் கச்சாமி …
தமிழன் வக்கீல் ஐயா நீங்கள் பட்டைய கிளப்புங்க ,அன்வாரை வெளியில் கொண்டு வாருங்கள் ,ரஜினிக்கு அடுத்து உங்களுக்குதான் பாலபிஷேகம்