திருநங்கைகளின் உரிமையை மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

transதிருநங்கைகளுக்குப்  பெண்கள்போல்  உடை  அணியவும்  பாவனை  செய்யவும்  உரிமை  உண்டு  என  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  அதிரடித்  தீர்ப்பு  ஒன்றை  வழங்கியுள்ளது.

பெண்களைப்  போல்  நடந்துகொள்ளும்  முஸ்லிம்  ஆண்களைத்  தண்டிக்கும்  ஷியாரியா  குற்றவியல் (நெகிரி  செம்பிலான்) இணைப்புச்  சட்டம்  பகுதி 66,  கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணானது  என நீதிபதி  ஹிஷாமுடின்  முகம்மட்  யூனுஸ்  தீர்ப்பளித்தார்.

எனவே, அது  செல்லாது  என  நீதிமன்றம்  அறிவித்தது.