பல்கலைக்கழகம் சட்டவிரோதமானது என அறிவித்த சொற்பொழிவை ஏற்பாடு செய்ததற்காக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள எட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சுமார் 100 மாணவர்கள் இன்று காலை மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)த்தில் ஒன்று திரண்டனர்.
அக்டோபர் 27-இல், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த யுஎம் மாணவர் சங்கத் தலைவர் பாஹிமி சைனல் உள்பட அந்த எண்மரும் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
‘யுஎம்8’ என்று பிரபலமாகியுள்ள அவ் வெண்மருக்கும் ஆதரவு தெரிவிக்க ‘யுஎம்மை ஆக்கிரமிப்போம்’ இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க மாணவர்கள் காலை ஒன்பது மணிக்கு பெர்டானா மஹாசிஸ்வா வளாகத்தில் ஒன்றுசேரத் தொடங்கினர்.
மாணவர்களின் இந்த ஆதரவு தெரிவிக்கும் இயக்கம் மாலை 5 மணிவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எத்தனை மாணவர் யு.எம்,நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்,வாழ்க நாராயண நாமம்.
வாழ்க போராட்டம், வாழ்க அன்வர், வாழ்க மாணவர் சமுதாயம், பாவம் பெற்றோர்.
பூமி மாணவர் பணம் வாங்காது,கோதாவில் குதிக்காது காரணம் அவர்கள் ஹிந்து அல்ல,நாராயண நாராயண.