தொகுதிகள் கூட்டப்படுவதை பக்கத்தான் ஒப்புக்கொள்ளக்கூடாது

tindakதேர்தல் தொகுதிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்கப்படுவதற்கு  பக்கத்தான்  உடன்படக்கூடாது  எனத்  தேர்தல்  சீரமைப்புக்காகப்  போராடும்  அமைப்புகளான  பெர்சேயும் திண்டாக்  மலேசியாவும்  கேட்டுக்கொண்டுள்ளன.

“சமூக  அமைப்புகள்  திட்டவட்டமாகக்  கூறியுள்ளோம்: இட எண்ணிக்கை  அதிகரிப்பு வேண்டாம்.

“எதிரணிகள்  இடங்கள்  கூட்டப்படுவதற்கு ஒப்புக்கொண்டால்  அதைப்  பொதுமக்களுக்கு  இழைத்த  துரோகமாகத்தான்  கருதுவோம்”, என திண்டாக்  மலேசியா  நிறுவனர் பி.ஒய்.  வொங்  செய்தியாளர்  கூட்டமொன்றில் கூறினார்.

அதே  கூட்டத்தில் பேசிய  பெர்சே  தலைவர்  மரியா  சின்,  கூடுதல் இடங்கள்  உருவாக்கப்படுவது  தேர்தலில்  வெற்றிபெற  உதவும்  என  பக்கத்தான் எண்ணலாகாது  என்றார்.

ஒவ்வொரு  தடவையும்  தொகுதிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்கும்போது  பிஎன்-னே  பெரும்  வெற்றி  பெற்றிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.