அன்வார் மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது

 

Anwar final day1அன்வார் மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் முன்வைக்கப்படுவதில் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதால், நீதிமன்றம் அதன் தீர்ப்பை பின்னொரு நாளில் அறிவிக்கும் என்று நீதிபதி அரிப்பின் தெரிவித்தார்.

நீதிமன்றம் அன்வாரின் பிணையையும் நீட்டித்தது.

தமது வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீராம், புஸ்ராவி மருத்துவமனை டாக்டர் ஓஸ்மான் ஒரு நேர்மையான, நம்பிக்கைக்குரிய சாட்சி என்றார்.

சைபுல் ஒரு குற்றச் செயலுக்கு துணை போனவர் என்று கருதப்பட வேண்டும் என்று கூறிய ஸ்ரீராம், அவரின் சாட்சியம் அதிகமான சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“இக்குற்றம் நடந்ததா என்பதில் பெரும் சந்தேகம் இருக்கிறது. அவரின் (சைபுலின்) நம்பக்கூடிய தன்மையில் சந்தேகம் இருக்கிறது. நம்பக்கூடிய தன்மை இல்லை என்றாகிவிட்டால், அதிகமான சான்றுகளால் உறுதிப்படுத்த வேண்டியது சம்பந்தமற்றதாகி விடுகிறது”, என்று Anwar final day2அவர் மேலும் கூறினார்.

அன்வார் தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஒரு சதி என்று கூறியதற்காக அவரை அரசு தரப்பு வழக்குரைஞர் குறைகூறியிருந்ததைக் குறிப்பிட்ட ஸ்ரீராம், அன்வார் மீது இரக்கம் காட்ட வேண்டும் ஏனென்றால் அவர் மீது இதே போன்ற குற்றம் 1998 ஆம் ஆண்டில் கேள்விக்குரிய சாட்சியங்களை முன்வைத்த ஒரு நபரால் சுமத்தப்பட்டது என்றார்.

2004 ஆண்டில், பெடரல் நீதி மன்றம் 2-1 பெரும்பான்மையில்அன்வாரை அக்குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது. ஆனால், அதே போன்ற குற்றத்தை அன்வார் வேறொரு நபருடன் புரிந்ததாக அவர் மீது மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது என்றார் ஸ்ரீராம்.

உண்மைக்கு ஈடுகொடுக்க இயலாத ஆதாரங்களைக் கொண்ட ஒரு சாட்சி கூறியதை வைத்துக்கொண்டு அன்வார் அரசு தரப்பால் வேட்டையாடப்படுகிறார் என்று கூறி தமது வாதத்தை ஸ்ரீராம் முடித்துக் கொண்டார்.