மகாதிர் கட்சியை இழிவுபடுத்துவதாக சிலாங்கூர் அம்னோ புலம்பல்

mahமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட், சிலாங்கூர்  அம்னோ  ‘ஊழல்’ தோற்றத்தைக்  கொண்டிருப்பதாகக் கூறி   கட்சியை  இழிவுபடுத்தியிருக்கிறார்  என  அதன்  செயலாளர்  ஜொஹான்  அப்துல்  அசீஸ்  கூறினார்.

தகுந்த  ஆதாரமின்றி  மகாதிர்  அவ்வாறு  கருத்துரைப்பது  முறையாகாது  என்றாரவர்.

“என்னைப்  பொருத்தவரை  துன்  ஊழல்  பற்றிக்  குறிப்பிட்டிருப்பது  தவறு. அதற்கான  ஆதாரம்  இருந்தால்- அவர்தான்  முன்னாள்  பிரதமராயிற்றே- அதிகாரிகளிடம்  தெரிவிக்கலாம்”, என்றவர்  சொன்னார்.