சொங் வெய்: என்றும் ஏமாற்றியதில்லை

weiஉலகின்  முதல்தர  பூப்பந்து  ஆட்டக்காரரான  லீ  சொங் வெய், வாழ்க்கையில்  தடைசெய்யப்பட்ட  பொருள்களை  என்றும்  பயன்படுத்தியதில்லை  என்று  சொன்னார்.

“நான்  ஏமாற்றியது  இல்லை. தடைசெய்யப்பட்ட  பொருள்களை  நம்புவதில்லை”, என  அந்த  மலேசிய  விளையாட்டு வீரர்  இன்று  முகநூலில்  பதிவிட்டிருந்தார்.

தாம்  சம்பந்தப்பட்ட  இவ்விவகாரத்தில்  பதில்  அளிக்கப்படாத  பல  கேள்விகள் மறைந்திருப்பதாகக்  குறிப்பிட்ட  அவர்  தமக்கு  ஏற்பட்டுள்ள  களங்கத்தை  விரைவில் போக்கிக்கொள்ள  முடியும்  என்றும்  நம்புகிறார்.

“இந்தச்  சிரமமான  நேரத்தில்  என்மீது  நம்பிக்கை  வைத்துள்ள  அனைவருக்கும்  நன்றி”, என்றாரவர்.