பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் விவகாரத்துக்குத் தீர்வு காண்பது பற்றி ஒவ்வொரு வாரமும் சிலாங்கூர் சுல்தானுடன் விவாதிக்கப்பட்டே வருகிறது என்கிறார் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி.
மந்திரி புசார் மாநில நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிலாங்கூர் சுல்தானை பேட்டி காண்பது வழக்கம்.
“அச்சந்திப்புகளின்போது பல விவகாரங்கள் விவாதிக்கப்படும். பைபிள் விவாகரத்துக்கும் சமயங்களிடையே பதற்றத்தை உண்டாக்காத வகையில் இணக்கமான தீர்வுகாண்பது பற்றியும் பேசுவோம்”, என்றாரவர்.
கடந்த திங்கள்கிழமை அது பற்றிக் குறிப்பிட்ட அஸ்மின், சுல்தானின் அனுமதியுடன் எந்த நேரத்திலும் ஒரு தீர்வு அறிவிக்கப்படலாம் என்று கோடிகாட்டியிருந்தார்.
“அடுத்தவர்களின் மத நூல்களை எரி..அதுதான் நம் மதத்துக்கு ஒருவர் செய்யும் கடமை ” என சொல்லும் மதம் மதமே அல்ல..அது புரம்போக்குகளின் கூடாரம்..நல்ல வேலை உண்மை சமய ஞானம் கொண்ட சில நல்லவர்களால் இந்த புனித மதம் சீர் கெடாமல் உள்ளது..
அந்த இணக்கமான நோக்கம் மிகவும் பிணக்கம் கொண்டதாக இருக்கும் போல் உள்ளதே…!
நான் நினைத்ததை க.ம.போ. அப்படியே சொல்லி விட்டார். இப்படியே சொல்லி அடுத்த தேர்தல் வரை காலம் தாழ்த்தி விடலாம் என்று மக்கள் கூட்டணி கனவு கான்கின்றார்களா?.
பட்டை நாமம்
அன்பே சிவம்
அடுத்தவர் புனிதத்தில் நாற்ற கையை வைக்காதே,வாழ்க நாராயண நாமம்.
பைபிள் , குரான் , பகவத்கீதா , இவைகளை அவமதித்தவன் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
தீபொறி ..உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்..