பேராசைதான் மரங்களை வெட்டிச்சாய்க்கிறது; உயிர்களையும் காவு கொள்கிறது

drமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசிய  காடுகள்  விரைவாக  அழிக்கப்படுவதால்  விளையக்கூடிய  விபரீதங்களை  தம்  வலைப்பதிவில்  சுட்டிக்காட்டியுள்ளார்..

“பலர் பலியாகி  இருக்கிறார்கள், இன்னும்  பலர்  பலியாகலாம்”, என்றவர்  எச்சரிக்கிறார். ஊழலும்  பேராசையும்  சேர்ந்து  நம்  காடுகளை விரைந்து  அழித்துவருவதாக  அவர்  குறிப்பிட்டார்.

காடுகள்  அழிக்கப்படுவதே  வெள்ளப்  பெருக்குகளும்  நிலச்  சரிவுகளும்  ஏற்படக்  காரணம்  என்பதை  யாராலும்  மறுக்கவியலாது.

இந்நிலையைத்  தடுக்க,  காடுகள்  சட்டவிரோதமாக  அழிக்கப்படுவதையும்  அதற்குப்  பின்னணியாகவுள்ள  ஊழலையும் ஒழிக்க  வேண்டும்  என்றாரவர்.

“அதன்பின்  சட்டப்பூர்வமாகக்  காடுகள்  அழிக்கப்படுவதன்மீதும்  கவனம்  செலுத்த  வேண்டும்.  மரங்களை  வெட்டித்தான்  பணம்  சம்பாதிக்க  வேண்டுமா?

“இதற்காக  சிலருக்குச்  சலுகைகள் கொடுக்கத்தான்  வேண்டுமா?. அப்படிச்  சலுகைகள்  பெறுவோர்  ஒன்றும்  ஏழைகள்  அல்லர். அவர்கள்  தங்களிடமுள்ளதைவிடவும்  அதிகமாகச் சேர்க்க  நினைத்தால்  அதற்கு  வேறு  வழிகள்  உள்ளன”, என்று  மகாதிர்  கூறினார்.