செய்தித்தாள் போன்ற அச்சு ஊடகங்கள், காலத்துக்கு ஏற்ப மாற்றம் காண வேண்டும். அப்போதுதான் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கருதப்படும் சமூக ஊடகங்களுடன் போட்டியிட முடியும்.
இதனை வலியுறுத்திய உத்துசான் மலேசியா குழுமத்தின் துணை செய்தியாசிரியர் சைனி ஹசன், வாசகர்கள் தகவல்களை விரைவாகப் பெற சமூக ஊடகங்களை நாடுவதால் இனி, அச்சு ஊடகம் செய்திதாள்களை விற்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றார்.
“மாறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாவிட்டால் அடுத்த ஐந்தாண்டுகளில் செய்தித்தாள்கள் கடும் சவால்களை எதிர்நோக்குவது உறுதி. ஒவ்வொரு அறிக்கையும் கட்டுரையும் செய்தியும் வாசகர்களின் கவனத்தைக் கவர்வதாகவும் நடப்பு நிலவரத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருத்தல் வேண்டும்”. நேற்று கோத்தா பாருவில் கிளந்தான் டாருல் நயிம் ஊடக சங்கத்தில் சக செய்தியாளர்களிடையே உரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இது தெரிந்தும் அனேக பொய்யும் புரட்டும் தானே உங்கள் செய்தித் தாளின் முக்கிய அங்கமாக உள்ளது. உங்களின் பத்திரிகையின் மூடு விழாவைக் கண்குளிரக் காண மிக2 ஆவலோடு ஆயிரக்கனைக்கில் மக்கள் ஆவலோடு உள்ளனர். அதனை விரைவில் செய்யுங்கள்., தயவு செய்து.
முதலில் நிங்க மாருங்கடா
இந்த நாட்டில் மக்களுக்கு ஞாயம் கேட்க எந்த கட்சியும் வருவதில்லை எல்லோறும் புத்ராஜெயாவை குறி வைத்து அப்பாவி மக்களை பயன்படுத்துகின்றனர் ஆதலால் இப்போது மக்கள் மேடியாவை தேடி ஓடுகின்றனர்.நாராயண நாராயண.