மாணவர்கள்மீது போலீசை ஏவுவது பொதுப் பணத்தை விரயமாக்கும் செயல்

usmயுனிவர்சிடி  மலேசியா  சாபா(யுஎஸ்எம்) வளாகத்தில் கலகக் தடுப்புப்  போலீசை  நிறுத்தி  வைப்பதும்  மாணவ  ஆர்வலர்களைக்  கைது  செய்வதும்  ‘வரிப்பணத்தை விரயமாகும்  செயல்’  என  பிகேஆர் இளைஞர்  பகுதி கூறியது.

மாணவர்களைக்  கைது  செய்ததற்கான  காரணத்தைக்கூட  போலீசால்  சொல்ல முடியவில்லை  என்பது  அவர்கள் மாணவர்  இயக்கத்தை “ஒடுக்கும்” கருவிகளாகத்தான்  பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்  என்பதைக் காண்பிப்பதாக பிகேஆர்  உதவித்  தலைவர்  டான்  கர்  ஹிங்  கூறினார்.

“மாணவர்கள்  பல்கலைக்கழக  வளாகத்தில்  பேசுவதைத்  தடுப்பதை  மட்டுமே  நோக்கமாகக்  கொண்ட  போலீஸ்  நடவடிக்கை  பொறுத்துக்கொள்ள முடியாத  அதிகார  மீறலாகும்”, என்றாரவர்.

இதனிடையே,  பிகேஆர்  இளைஞர் செயல்குழு  உறுப்பினர்  முர்னி  ஹிதயா  அனுவார்,  எட்டு  மாணவர்கள்  கைது  செய்யப்பட்டது  மாணவர்களுக்கு  “வாய்ப்பூட்டுப்  போடும்” மிரட்டலாகும்  எனக் குறிப்பிட்டார்.