பினாங்கு சிஎம் பதவிக்குச் சுழல்முறையைக் கொண்டுவரலாம்

pinangபினாங்கு  முதலமைச்சர்  பதவிக்குச்  சுழல்முறையை  அறிமுகப்படுதலாம்  என  டிஏபி  தஞ்சோங்  பூங்கா  சட்டமன்ற  உறுப்பினர்  தே  ஈ  சியு  பரிந்துரைத்துள்ளார். அத்துடன் ஒருவர்  இரண்டு  தவணைக்கு  மட்டுமே  பதவி  வகிக்கலாம்  என்றும்  வரையறுக்கப்பட  வேண்டும்.

இதன்வழி,  மகளிர்  உள்பட,  மற்ற  தலைவர்களுக்கும்  பினாங்கை  ஆட்சிசெய்யும்  வாய்ப்பு  கிடைக்கும் என்றவர்  சொன்னார்.

“ஜனநாயகக்  கோணத்தில் பார்த்தால்  இது  ஒரு  நல்ல  கருத்துத்தான். இது  நனவாக  எல்லாத்  தரப்பினரும்  ஒத்துழைக்க  வேண்டும்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.

அவரது  பரிந்துரையை  எதிரணித்  தலைவர்  ஜஹாரா  ஹமிட்டும்  பூலாவ் திக்குஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  யாப்  சூ ஹூய்  ஆகியோர்  வரவேற்றனர்.