சிலாங்கூர் குளறுபடிகளுக்கு நஜிப் பொறுப்பேற்க வேண்டும்

dre mஅரசியல்வாதிகள்  சாகும்வரை பதவியில்  இருக்க  முடியாது  என்கிறார் முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

அந்த  வகையில்,  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்கள்  பதவி  விலக  வேண்டும்  என்ற  அவரது கோரிக்கையை    அவர்  மீண்டும்  வலியுறுத்தினார். இருக்கும்  தலைவர்களால்  மாற்றத்தை உண்டுபண்ண  முடியாத  நிலையில்  பதவியை  அடுத்தவரிடம்  ஒப்படைப்பதே  முறையாகும்  என்றாரவர்.

அப்படியானால்,  கடந்த  தேர்தலின்போது  சிலாங்கூர்  அம்னோவுக்குத்  தலைமையேற்றிருந்த  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்தான்  சிலாங்கூர்  நிலவரங்களுக்குப்  பொறுப்பேற்க  வேண்டுமா  என்று  வினவியதற்கு, “அதை  அவர்தான்  முடிவு  செய்ய  வேண்டும்”, என்று  பதிலளித்தார்  மகாதிர்.

“என்னைக்  கேட்டால்  நீண்ட காலம்  இருந்து  சாதிக்க  முடியவில்லை என்கிறபோது (பதவியை) அடுத்தவரிடம்  கொடுப்பதே  மேல்  என்பேன்.

“நானே  பதவி  விலகினேன். என் இடத்தை  இன்னொருவருக்குக்  கொடுத்தேன். நம்மால்  முடியவில்லை  என்றால்  மற்றவர்கள்  செய்யட்டும்  என  ஒதுங்கி  அவர்களுக்கு  ஆதரவாக  இருக்க  வேண்டும்”, எனச்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அதுவே, ஒரு  தலைவரின்  அடையாளமாகும்  என்பது  மகாதிரின்  கருத்து.