அம்னோ பொதுக்கூட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கக் கோரும் முன்மொழிதல்கள்

 

UMNO Assemblyஎதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கக் கோரும் முன்மொழிதல்கள் முதன்மையான விவகாரமாக இருக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் ஹிசாமுடின் ஹுசேன் கூறுகிறார்.

அதனைத் தவிர்த்து தேச நிந்தனைச் சட்டமும் விவாதத்துக்குரியதாக இருக்கும் என்றாரவர்.

தாய்மொழிப்பள்ளிகளை அழித்து விட்டு ஒரே மொழிப்பள்ளிகள் நிறுவப்பட வேண்டும் என்று அம்னோவிலிருந்து வலுத்த வேண்டுகோள்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறான வேண்டுகோள்கள் விடுத்ததில் செராஸ் அம்னோ தொகுதி தலைவர் சைட் அலி அல்ஹாலாஷியும் ஒருவர். தாய்மொழிப்பள்ளிகள் இனவாதம் மற்றும் பிளவுக்கான விதைகளை UMNO Assembly1விதைக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், அம்னோவின் பங்காளிகாளான மசீசவும் கெராக்கானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.