தவறு செய்யும் அரசு அதிகாரிகளைத் தூக்குங்கள் என்கிறார் டயிம்

daimதலைமைக்  கணக்காய்வாளரின்  அறிக்கையில்  சுட்டிக்காட்டப்படும்  முறைகேடுகளுக்குப்  பொறுப்பான  நேர்மையற்ற  அரசு  அதிகாரிகளை  உடனே  வேலையைவிட்டுத்  தூக்க  வேண்டும்  என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின்.

கடுமையாக  எச்சரிப்பது அல்லது  குறைந்த  தண்டனை  அளிப்பது  போதாது  என்றாரவர்.

“கணக்குத்  தணிக்கை  ஒவ்வோராண்டும்தான்  செய்யப்படுகிறது, யாராவது கவலைப்படுகிறார்களா? நடவடிக்கை  எடுத்து  வேலையிலிருந்து  தூக்க  வேண்டும்….எச்சரிக்கை கொடுப்பதெல்லாம்  போதாது.

“தவறு  செய்கிறார்களா,  தூக்கி  எறியுங்கள்- அவ்வளவுதான். அதுதான்  முன்மாதிரியாக  அமையும். இல்லையேல்  கவலைப்படவே  மாட்டார்கள்”, என்றாரவர்.