சமூக இயக்கமான நெகாரா கூ ‘மலேசியாவின் சாரத்துக்கு’ப் புத்துயிர் அளிக்க நாடு முழுக்க தொடர்விளக்கக் கூட்டங்களை நடத்தி மிதவாதம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும்.
தீவிரவாத கருத்துகளைப் பரப்பும் முயற்சிகள் அண்மைக் காலமாக பெருகியிருப்பதைப் பார்க்கையில் இது மிகவும் அவசியமாகிறது என அதன் தலைவர் சைட் கமருடின் கூறினார்.
இம்மாதம் மலாக்கா, பேராக், ஜோகூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சாபா, கோலாலும்பூர் ஆகிய ஏழு மாநிலங்களில் அக்கூட்டங்கள் நடத்தப்படும்.
முதலாவது விளக்கக் கூட்டம் நாளை இரவு 8 மணிக்கு மலாக்கா, ஹெங் ஆன் சங்கத்தில் நடைபெறும்.
சமத்துவம், சமயச் சார்பிலாக் கோட்பாடு, அடிப்படை உரிமைகள் ஆகியவை மிரட்டலுக்கு இலக்காகியிருப்பதாக சொன்ன சைட், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்றார்.
ஜூலை மாதம் அமைக்கப்பட்ட நெகாரா கூ தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட், வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஆகியோரைப் புரவலர்களாகக் கொண்டிருக்கிறது.
60 என்ஜிஓ-களின் கூட்டமைப்பான அவ்வியக்கத்தின் நோக்கம் நாட்டில் இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் எதிர்ப்பதாகும்.
இப்படிப்பட்ட விளக்ககூட்டங்கள் இப்பொழுது நமது நாட்டுக்கு மிக மிகத்தேவையான ஒன்று .
நாட்டில் மேலும்2 குழப்பம் உண்டாக்கி அதிகாரத்தை அநீதியான முறையில் மேலும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள பலவாறு 2 கால் மேலாகவும், 1 தலை கீழாகவும் நின்று முக்கி முயலும் அதிகாரவர்க்க அதர்ம குழப்பவாதிகளின் அயோக்கியத்தனத் திட்டங்களுக்கு உங்களின் இந்தத் தொடர் விளக்கக் கூட்டங்கள் தொந்தரவாக அமையும். அதனால் அவர்களின் அடக்கமற்ற அடியாட்கள் அனுப்பப்படுவர். வழக்கமான ஒன்றுதானே!