சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்ற இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று சாபா மாநில சீரமைப்புக் கட்சி (ஸ்டார் சாபா) கோரிக்கை விடுத்துள்ளது.
“புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் பணிகள் எந்த அடிப்படையில் செய்யப்படும் என்பது தெரியவில்லை ஆனால், சாபா, சரவாக்கின் அரசமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க அவற்றுக்கு 35 விழுக்காட்டு நாடாளுமன்ற இடங்கள் கொடுக்கப்பட வேண்டும்”, என ஸ்டார் சாபா தலைவர் ஜெப்ரி க்ட்டிங்கான் இன்று கூறினார்.
“தீவகற்ப மலேசியாவுக்கு 65 விழுக்காட்டுமேல் கொடுக்கக்கூடாது. மலேசியா உருவானபோது அப்படித்தான் ஒப்புக்கொள்ளப்பட்டது”, என கிட்டிங்கான் கூறினார்.
கிழக்கு மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தால் umnob-வின் ‘வைப்புத்தொகையின்’ பலம் அதிகரிக்குமே..?!
இங்கே நாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்தால் கிழக்கில் சத்தம் குறையும்…வாலாட்ட பயம் வரும். சபா – சரவாக் மந்திரிகளின் கொட்டத்தை அடக்கவே பார்லிமென் விரிவாக்கம்..நமக்கு புரியும் ஒன்று மந்திரிகளுக்கு புரியாதா என்ன ?
வரவேற்ககூடிய நடவடிக்கை,இனத்தை காக்கும் செயல் வாழ்க நாராயண நாமம்.