பழனிவேலைக் கவிழ்க்க சதியா? மறுக்கிறார் சரவணன்

saraமஇகா  தலைவர்  ஜி.பழனிவேலைக்  கவிழ்க்க சதித் திட்டம்  உருவாகிக்  கொண்டிருப்பதாக  வதந்தி  பரப்புவோரை  கட்சி  உதவித்  தலைவர்  எம்.சரவணன் கடுமையாகச்  சாடினார்.
“2016-இல், கட்சித்  தலைமைப்  பொறுப்பிலிருந்து  விலகுவதாக  பழனிவேல்  தாமே  அறிவித்திருக்கிறார்  என்கிறபோது  அவரைக்  கவிழ்க்க  யாரும்  சதி  செய்ய  வேண்டிய  அவசியமே  இல்லை”, என  இளைஞர், விளையாட்டுத்  துணை  அமைச்சருமான  சரவணன்  கூறினார். .

“அந்த  வகையில்  அவர் கண்ணியமாக  நடந்துகொண்டிருக்கிறார். முந்திய  தலைவர்கள்  எவரும்  பதவி  விலகும்  நாளை  அறிவித்ததே  இல்லை”, என்றவர் பெர்னாமாவிடம்  தெரிவித்தார்.